1/17/2011

நிருவாக இயங்கு நிலை தொடர்பான விசேட கூட்டம்

நிருவாக இயங்கு நிலை தொடர்பான விசேட கூட்டம்.

_mg_0832கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாகாணத்தின் நிருவாகம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டது.
தற்போது வெள்ளம் முற்றாக வடிந்துள்ள நிலையில் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பது ஒரு புறம் நடந்த வண்ணம் இருக்கிறது. மறு புறம் கிழக்கு மாகாணத்தின் நிருவாகத்தினை இயக்குவது தொடர்பாக ஆராயப்பட்டுவருகின்றது. இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் இயங்கு நிலையினை சீர்படுத்தல் தொடர்பான விசேட கூட்டம் இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமி;ழ் மக்கள் விடுதலைப் லகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் தலைமையில் முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்த்தலத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலையினை ஏற்படுத்துதல் தொடர்பாக ஆராயப்பட்டது. பாடசாலைகளை இயக்குதல்,பாதைகள் பணரமைத்தல் அலுவலகங்களை இயக்குதல் பிரதேச சபைகளின் செய்றபாடுகளை துரிதப்படுத்துதல் கழிவுகளை அகற்றுதல் பழுதடைந்தவைகளை சீரமைத்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. முகாம்கள் இருக்கின்ற பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை திறக்கப்பட வேண்டும். பாடசாலைகளை துப்பரவு செய்யும் போது சிறிய மாவர்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் கேட்டுக் கொண்டார். அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாட நூல்கள் மற்றும் சீருடை என்பனவும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தாh. மேலும் சகல பிரதேச சபைகள் மற்றும் நகர சபை மாநகர சபைகள் கழிவுகளை அகற்றுகின்ற பணியினை துரிதப்படுத்த வேண்டும். பழுதடைந்த பாதைகள் மதகுகள் கல்வெட்டுக்கள் என்பவற்றை சீரமைத்தல் மற்றும் சுகாதாரம் பேணல் போன்ற விடங்களை அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். ,
இவ் விசேட கூட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ,தவிசாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன், முதலமைச்சரின் செயலாளார் கலாநிதி அமலநாதன், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்மா.உதயகுமாh.இ மாநகர ஆணையாளாசிவநாதன் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் சத்தியானந்தி பிரதேச சபையின் செயலாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment