1/27/2011

எகிப்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் மூவர் பலி


எகிப்திய அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் பொலிஸ் அதிகாரி என்றும், ஏனைய இருவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் என்றும் அந்நாட்டு அரசாங்கத் தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
துனீசியாவில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து எகிப்திய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் கய்ரோ நகரில் நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டு இரவு இரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்குப் பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும், ஆர்ப் பாட்டக்காரர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. எகிப்திய ஜனாதிபதி ஹொசின் முபாரக் 1981 ஆம் ஆண்டு முதல் ஆட்சி நடத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சி நடத்திவரும் எகிப்திய ஜனாதிபதி அந்நாட்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார். எகிப்தின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலையை அபிவிருத்தி செய்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்

0 commentaires :

Post a Comment