1/08/2011

வடகிழக்கில் தேசிய கீதம் தமிழ் மொழியிலேயே பாடப்படவேண்டும்.-கிழக்கு மாகாண முதலமைச்சர்

எமது நாட்டின் தேசிய கீதம் வடகிழக்கு பகுதிகளில் தமிழ் மொழியில் பாடப்பட முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாகாண கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒளி விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே முதலமைச்சர் இதனை தெரிவித்தார். வட கிழக்கு பகுதிகளில் நிருவாக மொழியாக தமிழ் மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாகவும் தமிழ் மொழி உள்ளமை யாவரும் அறிந்த விடையம். ஒரு நாட்டின் தேசிய கீதமானது தேசிய கொடியைப் போல் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் சொந்தமானதாகும். இதனை மொழியின் பெயரால் பிழவுபடுத்துவது பல்மொழி நடைமுறை உள்ள நாட்டில் சாத்தியம் குறைவான விடையமாகும். எனவே தேசிய கீதம் எந்த மொழியில் பாடப்படுவது என்ற சர்ச்சைகளுக்கு அப்பால் வடகிழக்கு பகுதியில் தேசிய கீதமானது தமிழ் மொழியிலேயே இசைக்கப்படுதல் வேண்டும்.
யுத்தம் நிறைவடைந்து மக்கள் ஓரளவான சமாதான சூழலையும் இயல்பு வாழ்கையில் அனுபவிக்கின்ற தருணத்தில் எமது நாட்டின் உறுதியான சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் கட்டி எழுப்புவதற்கு பதிலாக மீண்டும் மொழியின் பெயரில் இனத்தின் பெயரினால் பிழவுகளை ஏற்படுத்த விளைவது முட்டாள் தனமான விடையமாகவே நான் காண்கின்றேன். எனவே ஒன்றுபட்ட நாட்டுக்குள் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் என இச்சிறப்பு மிக்க விழாவில் அழைப்பு விடுகின்றேன். எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment