கடந்த வாரம் முதல் துனிசியா அரசுக்கு எதிராக அதிகரித்துள்ள பொதுமக்கள் எதிர்ப்பின் உச்சகட்டமாக அந்நாட்டு சர்வாதிகார ஜனாதிபதி சின் எல் அபிடைன் பென் அலி நாட்டைவிட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் குடும்பத்தினருடன் தஞ்சமடைந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளால் பென் அலியின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வேலையின்மை, பொருட்கள் விலையேற்றம், லஞ்ச ஊழல் என்பன துனிசிய மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்திய போதும், அரச அதிகார வர்க்கத்தின் ஊடக அடக்குமுறைகளினால் அரசுக்கு எதிராக பாரிய அளவில் வன்முறை வெடிக்காமல் அடங்கிப்போனது.
எனினும் சமீப காலமாக சர்வதேச செய்தி இணையத்தளங்களின் துணையுடனும், பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூகவளி இணையத்தளங்கள் துணையுடனும், அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்த துனிசிய மக்கள் இத்தகவல்களை தமது நாட்டு மக்களிடையேயும் சர்வதேசத்திடமும் விரைவாக பரப்பத் தொடங்கினர்.
விக்கிலீக்ஸ¤ம் இம்முயற்சியில் இணைந்து கொண்டு பென் அலியின் ஆட்சி முறை குறித்து விமர்சிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் கடந்த வாரம் துனிசிய சாலைகளில் நிகழ்ந்த வன்முறை கலவரங்களின் போது அரச காவற்துறையின் திடீர் தாக்குதலில் 23 பேர் பலியாகியதை சர்வதேச ஊடகங்கள் படம்பிடித்துக் கொண்டன. இச்சம்பவம் மேலும் மக்களை ஆவேசத்திற்கு உட்படுத்த அரசுக்கு எதிரான கலவரங்கள் மேலும் தீவிரமாகின. நேற்றைய தினம் துனிசிய உள்துறை அமைச்சகத்தின் கட்டட வாயிலில் ஆர்ப்பாட்ட க்காரர்கள் பென் அலியை உடனடியாக பதவி விலகு மாறு கோரிக்கை விடுத்தனர்.
இவற்றின் தொடர்ச்சியில் மக்கள் எழுச்சி அல்லது புரட்சியாகவே மாறிப்போன இப்போராட்ட முறையினால் துனிசிய நாட்டு அதிபர் பென் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டைவிட்டு வெளியேறி சவூதி அரேபி யாவில் தஞ்சமடைந்துள்ளனர். துனிசியாவில் இராணுவ கட்டுப்பாட்டின் ஆட்சி கொண்டுவரப்பட்டதுடன், ஊரடங்கும் நேற்று முதல் நடைமுறைப்படுத்த ப்பட்டுள்ளது.
பென் அலி மற்றும் குடும்பத்தினரை மகிழ்வுடன் வரவேற்பதாக சவூதி அரேபியாவும் தெரிவித்துள்ளது. எனினும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிற்கு செல்வதற்காகவே பென் அலி விமானத்தில் புறப்பட்டிருந்ததும், இந்த சூழ்நிலையில் அங்கு வரவேண்டாம் என பிரான்ஸ் அதிபர் நிகொலாஸ் சார்கோஸி கேட்டுக்கொண்டதாகவும் அல்ஜசீரா தகவல் வெளியிட்டிருக்கிறது
0 commentaires :
Post a Comment