1/01/2011

சமத்துவம், சம உரிமை, சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பும் சவால்களும் இப்புதுவருடத்தில் அனைவரின் கரங்களிலும் தங்கியுள்ளது. -கிழக்கு மாகாண முதலமைச்சர்

.

img_7702மலர்ந்திருக்கின்ற புதுவருடம் அனைவரது வாழ்விலும் புதியன படைத்து நல்லவைகள் நடந்திட  மனதார  வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
புதுவருடங்கள் கொண்டாடப்படுவது வெறும் கேளிக்கைக்காக அல்ல மாறாக ஒரு வருடம் எம்மை கடந்து சென்று விட்டது என்றால் நாம் அறிவியல் ரீதியாக, சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக இன்று பல்வேறு துறைகள் ஊடாக ஒரு வருடம் முதிர்ச்சி அடைந்தவர்களாக எம்மை மாற்றியமைத்திருக்க வேண்டும், இதுதான் கடந்து சென்ற  ஒரு வருடத்தில் நாம் பெற்ற சிறந்தவையாக இருக்க வேண்டும். ஆனால் வருடங்கள் பல எம்மை கடந்து செல்கின்ற போதிலும் அறிவு ரீதியாக, சமூக பற்று ரீதியாக எந்தளவு தூரம் முன்னேறியுள்ளோம் என்பது இப்புதுவருடத்தில் எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய வினாவாக உள்ளது.
எமது நாட்டை பொறுத்தளவில் குறிப்பாக தமிழ் மக்களை பொறுத்தவகையில் கடந்த பல வருட கால வேட்டுச் சத்தம் ஓய்ந்த நிலையில்  இப்புதுவருடம் பிறந்திருக்கின்றது. வேட்டுச் சத்தங்கள் ஓய்ந்தாலும் மக்களின் அரசியல் ரீதியான சமூக இருப்பு தொடர்பான, பொருளாதார மேம்பாடு தொடர்பான பல பிரச்சினைகள் இன்னும் தொடர்கின்றன.
இறுதியாக இடம்பெற்ற கடும் போரினால் உளவியல் ரீதியாகவும் கடும் பாதிப்படைந்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் பிறக்கின்ற இப்புதுவருடமானது இவைகளை வென்றெடுக்க வேண்டிய சவால் மிக்கதொரு வருடமாகவும் அமையலாம்.
யுத்தத்தின் பிடியில் இருந்து எமது நாடு மீண்டிருக்கின்ற பொழுதிலும் அனைத்து மக்களையும் சம பிரஜைகளாக கருதி சமத்துவம், சம உரிமை, சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பும் சவால்களும் இப்புதுவருடத்தில் அனைவரின் கரங்களிலும் தங்கியுள்ளது. இதனை மனதில் நிறுத்தி வெறுப்புக்களை துறந்து இனியொரு அழிவு ஏற்படாமல் ஒன்றுபட்ட நாட்டுக்குள் உரிமைகளை பகிர்ந்தளித்து சகோதரத்துவத்துடன் நிலையான அபிவிருத்தி காண இப்புதுவருடத்தில் கரம் கோர்த்து செயற்படுவோம் என அனைவரையும் அழைக்கின்றேன்.
மீண்டும் இப்புதுவருடத்தினை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.
முதலமைச்சர்,
கிழக்கு மாகாணம்.

0 commentaires :

Post a Comment