1/15/2011

அணுசக்தி பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு இறுதி வாய்ப்பு - ஈரான்

அடுத்த வாரம், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நடக்கும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு அளிக்கப்படும் இறுதி வாய்ப்பு என்று ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சந்தே கம் கொண்டுள்ளன. ஆனால் தனது அணுசக்தி ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த 2009ல் இது பற்றி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடை ந்ததை அடுத்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இதனால், மீண்டும் பேச்சுவார்த்தைக் கிணங்க வேண்டிய சூழல் ஈரானுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, இம்மாதம் 21 மற்றும் 22ம் திகதிகளில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ஈரானுக்கும், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஜெர்மனி ஆகியவற்றுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இது குறித்து சர்வதேச அணுசக்தி முகவருக்கான ஈரானின் தூதர் அலி அஸ்கர் சுல்தானியா கூறுகையில், டெக்ரானில் உள்ள அணு உலையில் தயாரிக்கப்படும் யுரேனியம், மருத்துவப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். இது குறித்து நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தால் மேற்கத்திய நாடுகளுக்கு இதுவே இறுதி வாய்ப்பாக அமையும் இதையடுத்து, மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஈரான் பாராளு மன்றம் அனுமதி அளிக்காது என்றார்.

0 commentaires :

Post a Comment