.
தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாவட்டத்திலே மட்டக்களப்பு முதலிடம் விகிக்கிறது.மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள். இவர்கள் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரவசதிகள் இன்றி தவிர்ப்பதோடு உணவுகளைப் பெறுவதிலும் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றார்கள்.
இன்று கோரளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அனைத்து முகாம்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் நேரில் சென்றார். அங்குள்ளமக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன்.அனைத்து முகாம்களிலும் உள்ள மக்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.
விசேடமாக குழந்தைகளுக்கான பால்மா விஸ்கட் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.அத்தோடு சமைத்த உணவுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும் முதலமைச்சர் சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.
விசேடமாக குழந்தைகளுக்கான பால்மா விஸ்கட் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.அத்தோடு சமைத்த உணவுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும் முதலமைச்சர் சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.
வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கிழக்குமாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் வழங்கிவைப்பதனையும் மற்றும் வழங்கப்பட்ட ஒரு தொகுதிப் பொருட்களையும் படத்தில் காணலாம்.இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம்(ஜெயம்)இதவிசாளர் கணேசன் ஆகியோரும் கலந்து nகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்கள்.
0 commentaires :
Post a Comment