திருமலையிலுள்ள கட்டிடங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் உத்யோகபூர்வமாக கையளிக்கப்படும்
வட மாகாண சபை அலுவல கங்களை திருகோணமலையி லிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் மேற்கொள்ளப் படுகின்றன.
திருமலை, வரோதயர் நகரில் இது வரை காலம் இயங்கி வந்த இந்த அலுவலகங்களே யாழ். நகருக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இடமாற்றும் நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் பூர்த்திய டைய உள்ள நிலையில் திரு மலையில் கடமையாற்றிய அனைத்து ஊழியர்களும் இனி மேல் வடக்கில் கடமையாற்ற வுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
திருமலையிலுள்ள வட மாகாண சபை ஆவணங்கள் மற்றும் அலுவலக தளவாடங் களை கொண்டு செல்லும் பணி இன்று முதல் ஆரம்பமாக வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இடமாற்றும் பணிகள் முடிவுற்றதும் திருமலையிலுள்ள கட்டிடங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் உத்யோகபூர்வமாக கையளிக்கப்படும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
திருமலையில் தற்போது இயங்கி வரும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் வட மாகாண சபை அலுவலகங்களுக்கு நேற்று விஜயம் செய்த ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, அங்கு கூடியிருந்த சகல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றியதுடன் கடந்த நான்கு வருட காலமாக சிறந்த முறையில் சேவையாற்றியமைக்காக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநரின் செயலாளர், எஸ். ரங்கராஜா, வட மாகாண பிரதம செயலாளர் ஏ. சிவசுவாமி, வட மாகாண சபையின் கீழுள்ள சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment