கிழக்கு மாகாணத்தில் ஏறபட்டுள்ள வெள்ள அனர்த்தத்தில் முற்றுமுழுதாகப் மட்டக்களப்பு மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தினை முதற் கட்டமா கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கொண்டுவருகின்றார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல பிரதேசங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றார். இன்று மட்டக்களப்பு மாவட்டதட்தின்; ஏறாவூர் பிரேதச செயாலளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனஇ பாலர்சேனைஇ வேப்வெட்டுவான்இ காரைக்காடு போன்ற கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் வழங்கி வைத்தார். நேற்று கல்லடி மாதர் சங்க உறுப்பினர்களுக்கும் களுதாவளைப் பிரதேச மக்களுக்கும் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. நாளை திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கும் வாகரைப் பிரதேசத்திற்கும் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 commentaires :
Post a Comment