மட்டக்களப்பில் ஓட்டமாவடி, ஏறாவூர் பிரதேசபை, காத்தான் குடி நகர சபை முதலானவை கலைக்கப்பட்டுள்ளன. இதில் ஏறாவூர் இன்று முதல் நகர சபையாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது சுயேச்சைக் குழு மட்டக் களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்தியது.
காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏ. ஜி. எம். ஹாறூன் என்பவர் சுயேச்சைக் குழுவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தி வேட்பு மனுப்பத்திரத்தை பெற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் முன்னிலையில் இக்கட்டுப்பணத்தினை இச் சுயேட்சைக் குழு செலுத்தியது.
எதிர்வரும் 26ம் திகதி நண்பகல் 12 மணி வரை சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த முடியும்.
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை அடிப்படையாக கொண்ட பிரதேசசபைகளான வாகரை , வாழைச்சேனை ,செங்கலடி , வவுணதீவு ,வெல்லாவெளி ,களுதாவளை ,பட்டிபளை,ஆரயம்பதி ,மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை போன்றவை கலைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
0 commentaires :
Post a Comment