பிரேஸிலின் முதலாவது பெண் ஜனாதிபதியாக டில்மாருசூப் கடந்த 01ம் திகதி பதவியேற்றுக் கொண்டார். 63 வயதான இவர் முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வாவுடைய முக்கிய அமைச்சராகப் பணியாற்றியவர். பதவியேற்பு வைபவத்தில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் தலைவர்களும் பங்கேற்றனர்.
வாகன ஊர்வலத்தில் ஜனாதிபதி மாளிகையை நோக்கி டில்மாருசூப் அழைத்து வரப்பட்டார். இங்கு உரையாற்ற முன்னர் நாட்டின் தேசிய கொடியையும் பறக்கவிட்டார்.
பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதிய ஜனாதிபதி டில்மாருசூப் நாட்டின் கொள்கையைத் தொடர்ந்தும் பாதுகாக்கப்போவதாகவும் முன்னாள் ஜனாதிபதியின் கொள்கையை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டார். இதேநேரம் பதவி விலகிச் செல்லும் ஜனாதிபதி லூலா டி சில்வா அரசமாளிகையை ஒப்படைத்துவிட்டு தனது தனியார் வாசஸ்தலம் சென்றார்.வெனிசுலா ஜனாதிபதி, அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு
காரகாஸ்: வெனிசுலா அதிபர் ஹ்யூ கோசாவேசும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் கைகுலுக்கிக் கொண்ட சம்பவம், பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் மூலம், இருதரப்பு உறவும் மேம்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் ஹ்யூகோ சாவேசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், கடந்த பல ஆண்டுகளாக சுமுகமான உறவு இல்லை. சமீபத்தில், வெனிசுலா நாட்டிற்கான புதிய அமெரிக்கத் தூதரை அந்நாடு நியமித்த போது, அவரை ஏற்க மறுத்து விட்டார் சாவேஸ். இதையடுத்து, அமெரிக்காவுக்கான வெனிசுலா நாட்டுத் தூதரின் விசாவை அமெரிக்கா ரத்து செய்து விட்டது.
இந்நிலையில் பிரேசிலின் புதிய அதிபராக டில்மா ரூசெப் பதவி ஏற்பு விழாவில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், வெனிசுலா அதிபர் சாவேசும் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் நேருக்கு நேராக சந்திக்க நேர்ந்த போது, பரஸ்பரம் புன்னகையுடன் கைகுலுக்கிக் கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாவேஸ், “பரஸ்பரம் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டோம்” என்று கூறினார். எனினும் இச்சந்திப்பால் பல ஆண்டுகளாக சீர்குலைந்திருக்கும் இருதரப்பு உறவுகளும் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
திரண்டிருந்தனர்
0 commentaires :
Post a Comment