1/03/2011

தமிழ்க் கட்சிகளை இணைத்து பரந்துபட்ட முன்னணி அமைக்க முயற்சி

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட முன்னணியொன்றை ஏற்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப் பின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைத் தீர்வில் தமிழர்கள் சார்பில் பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலேயே தமிழ்க் கட்சிகளின் அரங்கம் உருவாக்கப் பட்டது எனக் குறிப்பிட்ட அவர், இதேபோல எதிர்வரும் உள்ளூரா ட்சி சபைத் தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட முன்னணி யொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிரு ப்பதாகவும் தினகரனுக்குத் தெரிவி த்தார்.
இது விடயம் தொடர்பில் ஏற்கனவே மூன்று கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம். இதுவரை பேச்சுவார்த்தை நடத்திய கட்சிகள் இணைந்து செயற்படுவது தொடர்பில் தமது விருப்பத்தை வெளிக்காட்டியுள்ளன.
குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ. பி. டி. பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளையும் இணைத்து பரந்துபட்ட முன்னணியொன்றை உருவாக்குவதே எமது முயற்சி என்றார் சிவாஜிலிங்கம்.
அதேநேரம், இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழர் தரப்பில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் இணைந்து உருவாக்கியிருக்கும் உப குழு எதிர்வரும் வாரம் கூடவிருப்பதாக அவர் மேலும்குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment