1/02/2011

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம்!

இலங்கை மற்றும் புகலிடத்தில் வாழும் சமூக அக்கறையாளர்களான நாங்கள் எதிர்வரும் சனவரியில் இலங்கையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்று இந்த அறிக்கையின் கீழே கையொப்பமிட்டுள்ளோம்.

கடந்த முப்பது வருடகால யுத்தத்தால் உறவுகள் சீர்குலைந்து போயிருக்கும் தமிழ் - முஸ்லிம் - மலையக -சிங்கள எழுத்தாளர்களிடையே ஒரு பகைமறுப்புக் காலத்தைத் தோற்றுவிக்கவும் இலங்கையில் தமிழ்மொழி இலக்கியத்தைச் செழுமைப்படுத்துவதற்கான ஓர் எத்தனமாகவும் பல்வேறு கருத்து - அரசியல் நிலைப்பாடுகளிலிருக்கும் எழுத்தாளர்களிடயே ஓர் ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்கும் களமாகவும் நாங்கள் இந்த மாநாட்டைக் கருதுகிறோம்.

அயல்நாட்டு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கும் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே சிந்தனைப் பரிமாறலை சாத்தியப்படுத்துவதோடு அவர்கள் எதிர்காலத்தில் இணைந்து பல்வேறு இலக்கியப் பணிகளை முன்னெடுக்கவும் இந்த மாநாடு வாய்ப்பளிக்கும் எனக் கருதுகிறோம்.

மாநாட்டு அமைப்பாளர்கள் முன்வைத்திருக்கும் 12 முன்னோக்குகளும் மிகச் சரியானவை எனவும் அவை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நன்மைகளைச் சாதிக்கவல்லவை என்றும் கருதுகிறோம்.

இந்த மாநாடு இலங்கை அரசால் நடத்தப்படவில்லை என மாநாட்டு அமைப்பாளர்கள் பலதடவைகள் ஊடகங்களில் உறுதிமொழிகளை அளித்துள்ளார்கள். இம்மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்குமான தொடர்புகள் இதுவரை எவராலும் நிரூபணம் செய்யப்படவில்லை. மாநாடு மீது இவ்வாறு ஆதாரமில்லாத அவதூறுகளைச் சுமத்திய எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையையும் 'குமுதம் ரிப்போர்டர்' இதழையும் 'புதிய ஜனநாயகம்' இதழையும் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம்.

இந்த மாநாட்டை நிராகரிக்கக்கோரி "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்" என்ற பெயரால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை நாங்கள் முற்று முழுவதுமாக நிராகரிக்கிறோம். இந்த மாநாட்டை இலங்கை அரசு பயன்படுத்திக்கொளளக் கூடும் என்ற ஊகமே அவர்களது அறிக்கையின் மையம். இந்த ஊக அரசியல் மலிவானது. ஊகத்தை முன்னிறுத்தியே ஒரு ஆக்கபூர்வமான மாநாட்டை அவர்கள் நிராகரிக்கக் கோருவது அநீதியானது. மாநாடு அரசு சார்பாக மாறாதவரை ஊகத்தின் அடிப்படையில் அதை நிராகரிக்கக் கோருவது நியாயமற்றது எனக் கருதுகிறோம்.

இன்று இலங்கையில் ஊடகச் சுதந்திரம் அரசால் கடுமையாக அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இவ்வாறான ஒரு மாநாடு தேவையா என எழுப்பப்படும் எதிர்ப்புகளையும் நாம் நிராகரிக்கிறோம். இந்த அச்சுறுத்தல் சூழலுக்குள்ளும் அதை எதிர்கொண்டு மாநாடு நடத்தப்படுவதையும் குழு நிலை மோதல்களிற்கு அப்பால் அரசியல் உண்மைகளைப் பேசுவதற்கு மாநாட்டில் தடையில்லை என அறிவித்திருக்கும் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாட்டையும் வரவேற்கிறோம்.

கடந்த முப்பது வருட யுத்தத்தில் இலங்கை அரசு செய்த அனைத்துக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியும் இழப்பீடுகளும் வழங்கப்பட
வேண்டும். ஆனால் அதற்காக இலங்கையில் எந்த நிகழ்வுகளையுமே நடத்தக் கூடாது எனச் சொல்லப்படும் கருத்துகளை நாங்கள் மறுக்கிறோம். குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை நோக்கி நடத்தப்படும் மாநாட்டை நடத்தக்கூடாது எனச் சட்டாம்பிள்ளைத்தனம் செய்பவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இலங்கையில் மாநாடு நடத்துவது எமது பிறப்புரிமை. முப்பது வருடகால யுத்தத்தில் எழுத்தாளர்கள் கலைஞர்களிடமிருந்து இலங்கை அரசாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இன்னபிற ஆயுதக் குழுக்களாலும் பறிக்கப்பட்ட கருத்து - எழுத்து உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய நெடிய போராட்டம் எம்முன்னே உள்ளது. அந்த நெடிய பாதையில் இவ்வாறான ஒரு மாநாடு நடைபெறுவது ஒரு முன்னேற்றகரமான புள்ளியென்றே கருதுகிறோம்.

இலங்கையின் எல்லாச் சமூகத்தளங்களிலும் இருந்தும் எழுத்தாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்க வேண்டுமென விரும்புகிறோம். குறிப்பாக தலித்துகள், பெண்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் போன்ற விளிம்புநிலையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்நிலைப்படுத்தப்பட வேண்டுமென மாநாட்டு அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த மாநாட்டிற்குப் புலமைசார் பங்களிப்பையும் தார்மீக ஆதரவையும் வழங்குமாறு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

-28 டிசம்பர் 2010.

அறிக்கையில் இலங்கையிலிருந்து கையொப்பமிடுபவர்கள்:

தெணியான் (எழுத்தாளர், சிறுபான்மைத் தமிழர் மகாசபை)
கவிஞர் சோ.பத்மநாதன்
சுமதி சிவமோகன் (பேராசிரியை, பேராதெனியா பல்கலைக்கழகம்)
ரியாஸ் குரானா (எழுத்தாளர்)
பெர்னாண்டோ ஜோசப் (பத்திரிகையாளர்)
தமிழழகன் (சிறுபான்மைத் தமிழர் மகாசபை)
மஜீத் (எழுத்தாளர்)
மு.மயூரன் (எழுத்தாளர்)
தேவராஜன் ரெங்கன் (சட்டத்தரணி, சமூகவியலாளர், பத்திரிகையாளர்)
ஏ.சி.ஜோர்ஜ் (ஆசிரிய ஆலோசகர், சமூகவியலாளர், எழுத்தாளர்)
சே.சிவபாலன் (மனித உரிமை செயற்பாட்டாளர்)
பூபாலசிங்கம் சிறீதர்சிங் (பதிப்பாளர்)
கிருஸ்ணசாமி கிருபானந்தா (எழுத்தாளர்)
சிவநாமம் சிவதாசன் (எழுத்தாளர்)
பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா (யாழ் பல்கலைக்கழகம்)
கே.வி.குணசேகரன் (ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர்)
வை.சிவசுப்பிரமணியம் (எழுத்தாளர்)
த.பாலதயானந்தன் (ஊடகவியலாளர்)
மதுரகவி காரை எம்.பி.அருளானந்தம்
ந.சதீஸ் (ஊடகவியலாளர்)
ஜெ.பாலகுமரன் ( ஊடகவியலாளர்)
பா.கலைவாணி (பத்திரிகையாளர்)
க.சோபனா (பத்திரிகையாளர்)
வல்லி தாமோதரராஜா (பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர், பளை)
சின்னத்தம்பி தங்கராசா (உதவி அரச அதிபர், சாவகச்சேரி)
தியாகராஜா சண்முகவடிவேல் (ஊடகவியலாளர்)
செல்லத்துரை நவநாதன் (பத்திரிகையாளர்)
செல்லத்தம்பி மாணிக்கம் (விரிவுரையாளர்)


அறிக்கையில் புகலிடத்திலிருந்து கையொப்பமிடுபவர்கள்: 

வி.ரி. இளங்கோவன் (எழுத்தாளர்)
சரவணன் நடராசா (ஊடகவியலாளர்)
கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்
சுமதி ரூபன் (எழுத்தாளர்)
ஹரி இராசலட்சுமி (எழுத்தாளர்)
த. அகிலன் (எழுத்தாளர், வடலி பதிப்பாளர்)
கரவைதாசன் (எழுத்தாளர்)
நிர்மலா ராஜசிங்கம் (இலங்கை ஜனநாய ஒன்றியம்)
சந்துஷ் (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்)
நட்சத்திரன் செவ்விந்தியன் (எழுத்தாளர்)
ரவிநேசன் பொன்னுத்துரை (பத்திரிகையாளர்)
உதயகுமார் (ஊடகவியலாளர்)
ஜீவமுரளி (எழுத்தாளர்)
விஜி (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
தேவதாசன் (தலைவர் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி, இணைப்பாளர் சிறுபான்மைத் தமிழர் மகாசபை)
நோயல் நடேசன் (எழுத்தாளர்)
அசுரா (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
அன்ரன் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
சிவசாமி சிவராசன் (புலம் பெயர்ந்த இலங்கையர்களிற்கான வலையமைப்பு)
எஸ்.சுந்தரலிங்கம் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
அருந்ததி (திரைப்பட இயக்குனர், தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
எஸ். காசிலிங்கம் (இலங்கை கிராம அபிவிருத்திச் சங்கம்)
யோகரட்ணம் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
ப.பகீரதன் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)
தர்மினி ( 'தூமை' இணையத்தளம்)
தேவகாந்தன் (எழுத்தாளர்)
எம்.ஆர்.ஸ்டாலின் (ஜனநாயத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி)
ஷோபாசக்தி (எழுத்தாளர்)
உமா (எழுத்தாளர்)
கற்சுறா ( 'மற்றது' இணையத்தளம்)
ராமமூர்த்தி ராஜேந்திரன் (முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்)
ச.வாசுதேவன் (நாடகக் கலைஞர்)
செ.கிருஸ்ணமூர்த்தி (எழுத்தாளர்)
டி.பி.எஸ்.ஜெயராஜ் (பத்திரிகையாளர்)
நா. ஸ்ரீ கெங்காதரன் (சமூக சேவையாளர்)
அகிலன் கதிர்காமர் ( இலங்கை ஜனநாயக ஒன்றியம்)
நஜா முகமட் (இலங்கை இஸ்லாமியர் முன்னணி)
மாணிக்கம் நகுலேந்திரன் (ஆசிரியர் -தாகம், நிரூபம்)
ராகவன் ( (இலங்கை ஜனநாய ஒன்றியம்)



























0 commentaires :

Post a Comment