1/01/2011

புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கலாம் _

  அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் எவ்விதமானமாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழு எம்மிடத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு வருகைதரவில்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காகவே நிபுணர்கள் குழுவினர் வருகைதரவிருக்கின்றனர். அதேபோல இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் சாட்சியமளிக்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

ஐ.நா.செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மூன்றுபேர் கொண்ட நிபுணர் குழுவிற்கும் அரசாங்கத்திற்கு எவ்விதமான கொடுக்கல் வாங்களும் இல்லை அரசாங்கம் செயலாளர் நாயகத்துடனேயே தொடர்பினை கொண்டுள்ளது நிபுணர் குழு விசா கேட்டால் அதனை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சரவைப்பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்தார். ___

0 commentaires :

Post a Comment