கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நேற்று (17) பாடசாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். நிஸாம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள 1006 பாடசாலைகளில் 81 பாடசாலைகள் நேற்றைய தினமும் திறக்க முடியாதநிலை ஏற்பட்டிருந்தது.
46 பாடசாலைகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் 35 பாடசாலைகள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரி முகாம்களாகச் செயற்படுகின்றன. இதேவேளை, மேலும் 10 பாடசாலைகளில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள போதிலும் அப்பாடசாலைகளும் நேற்று முதல் இயங்குகின்றன. மட்டக்களப்பு மாவட் டத்தில் 28 பாடசாலைகளும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாடசாலையும் திருகோணமலை மாவட்டத்தில் 52 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
திருகோணமலை மூதூர்க் கல்வி வலயத்திலேயே அதிக பாடசாலைகள் இயங்க முடியாத நிலையில் உள்ளன.
தற்போது இயங்க ஆரம்பித்த பாட சாலைகளில் மாணவர்களது வரவு குறை வாகவே காணப்படுவதாகவும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்
0 commentaires :
Post a Comment