ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக் கும் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டி ருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
ஆனாலும், இந்த குண்டு வெடிப்பில் 40 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். படுகாயங்களுடன் 80க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
குண்டு வெடிப்பால் ஆத்திரமடைந்த பொது மக்கள், பொலிஸார் சரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். பொது மக்களில் சிலர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலவரக் காரர்களை கலைக்க பொலிஸாரும் திருப்பி சுட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் யாரும் பலியானார்களா? என்ற விவரம் தெரியவில்லை.
ஷியா பிரிவைச் சேர்ந்த பிரதமர் நூரி அல்- மாலிக் தலைமையில் மீண்டும் அமைந்த அரசுக்கு சவால் விடும் வகையில் இந்த குண்டு வெடிப்பை சதிகாரர்கள் நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த பெரிய குண்டு வெடிப்பு தவிர பாக்தாத் நகரில் மேலும் 4 இடங்களில் குண்டுகள் வெடித்ததாகவும், இதில் பலர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 commentaires :
Post a Comment