1/25/2011

ரஷ்ய விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல்; 31 பேர் பலி



ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள டோமொதேடாவா விமான நிலையத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 31 பேர் பலியாகி யிருப்பதுடன், 131 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளனர். ரஷ்ய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது தற்கொலைக் குண்டுத் தாக்குதலாக இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
விமான நிலையக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து நகரின் ஏனைய பகுதிகளிலும் குண்டுத் தாக்குதல்கள்
இடம்பெறலாமென்ற அச்சத்தில் பொலிஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புத் தலைமை அதிகாரியை அவசரமாக அழைத்த ரஷ்ய ஜனாதிபதி அவசர பேச்சுவார்த்தையொன்றையும் நடத்தியுள்ளார்.

0 commentaires :

Post a Comment