14 ஆவது குடிசனத்தொகை மதிப்பீடு 30 வருடங்களின் பின்னர் இந்த வருடம் நடைபெறவுள்ளது.
இதற்கு 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். இதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
சனத்தொகை மதிப்பீடு புதிய முறையில் முன்னெடுக்கப்பட உள்ளதோடு இதற்காக வெளிநிறுவனமொன்றின் சேவையைப் பெறுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சர் கூறினார்.
இறுதியாக 1981ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு தவிர 18 மாவட்டங்களில் குடிசன மதிப்பீடு நடத்தப்பட்டது. இம்முறை முழுநாட்டிலும் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.
0 commentaires :
Post a Comment