மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நடவடிக்கைகளுக்கென அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர 25 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன், பிரதியமைச்சர்களான வி.முரளிதரன், ஹிஸ்புல்லா, பசீர் சேகு தாவுத் உட்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயர் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர். _
0 commentaires :
Post a Comment