1/07/2011

228 பிரதேச சபைகள்; 40 நகர சபைகள்; வடக்கில் 32 சபைகள் 308 உள்@ராட்சி சபைகளுக்கு தேர்தல்: அரசாங்கம் அறிவிப்பு

308 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுமென அரசாங்கம் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால் நேற்று நள்ளிரவு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டிலுள்ள 330 உள்ளூ ராட்சி மன்றங்களில் 308 மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.
பதவிக்காலம் குறைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்தும் பொருட்டும், அதன் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைய பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி உள்ளூராட்சி ஆணையாளர்களையும் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர்களாக நியமித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள தாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு - 02 இல் உள்ள உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அதாவுல்லா மேலும் தகவல் தருகையில்,
2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் காலம், 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் நீடிக்கப்பட்ட காலத்தை குறைக்க தீர்மானித்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய 228 பிரதேச சபைகள், 40 நகர சபைகளுக்கான தேர்தல் நடை பெறவுள்ளதுடன் வடபகுதியைச் சேர்ந்த 32 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நீண்டகால இடைவெளிக்குப்பின் நடைபெறவுள்ளது.18 மாநகர சபைகள், கொலன்னாவ, வவுனியா நகர சபைகள் மற்றும் சில பிரதேச சபைகளுக்கான
தேர்தல்கள் நடத்தப்படமாட்டாது என்று அவர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளின் சில போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளதால் கொழும்பு, கோட்டே, கொலன்னாவ, தெஹிவளை - கல்கிஸ்சை, கண்டி, குண்டசாலை, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ ஆகிய மாநகர, நகர, பிரதேச சபைகளின் பதவிக்காலம் குறைக்கப்பட வில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நீடிக்கப்பட்ட மாநகர சபைகளின் பதவிக் காலத்தை குறைக்காது விடுமாறு சகல கட்சிகளையும் சேர்ந்த மாநகர சபைகளின் நகர பிதாக்களின் ஒன்றியம் ஜனாதிபதியிடமும் அமைச்சிடமும் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டது. இதற்கு அமைய இவற்றின் காலத்தை குறைக்காது மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மாநகர சபைகள் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் உரிய காலத்தினுள் மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வட மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களில் 32 மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக தெரிவித்தார்.
காலம் குறைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடத்துவதற்கான அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் வழங்குவார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
காலம் குறைக்கப்பட்ட சகல மன்றங்களுக்குமான தேர்தல் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்ட முறையிலேயே நடைபெறும். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலம் அங்கீகரிக் கப்பட்ட பின்னர் எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு நியமிக்கப்படும் இந்த ஆணைக்குழு தமது கடமைகளை சரிவர செய்ய சுமார் 8 மாத காலமாவது தேவைப்படுகிறது. இந்நிலையில் தேர்தலை வைக்காமல் காத்திருக்க முடியாது என்றார்.

0 commentaires :

Post a Comment