2010ம் ஆண்டு இலங்கை எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் நிலையில், 2011 ஆம் ஆணடு 8.5 வீத பொருளாதார வளர்ச்சியென்ற இலக்கை நோக்கிப் பயணிப்பதாக, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டில் முன்னெடுக்கவிருக்கும் செயற்பாடுகள் மற்றும் நிதித் துறையின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் நேற்று நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறினார்.
2010 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலையில் இருக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2008ம் ஆண்டு முன்னறிவிப்புச் செய்திருந்த நிலையில், அரசாங்கம் வடக்கு, கிழக்கில் பல்வேறு அபிவிருத்திகளில் முதலீடு செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் சில வருடங்களுக்கு 8 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அனைத்துத் துறையின ரதும் ஒத்துழைப்புப் பெறப்படும் என்றும்அவர் குறிப்பிட்டார். நாட்டில் சமாதான சூழ்நிலை காணப்படும் சந்தர்ப்பத்தில் அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடக் கூடியளவு முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் அறிக்கையிடப்பட்டுள்ளன. வேலையற்றோர் வீதம் 5.2 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஜீ. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்பட்ட போதும் ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட வருமானம் 13.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணத்துறை மூலம் 61.4 வீதம் வருமானம் ஈட்டப்பட் டிருப்பதுடன், இதனூடாக 501 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த வருடத்தில் சேமிப்புக்கள் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளன.
2011ம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 வீதமாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் ஈட்டிய வருமானம் மற்றும் உதவிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.6 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அரசாங்கத்தின் மொத்தச் செலவீனங் கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22.4 வீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2010 ஆம் ஆண்டு இலங்கை செலுத்த வேண்டிய தொகை 900 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் மூலம் 2010 ஆம் ஆண்டில் கிடைக்கப் பெற்ற வரு மானம் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
ஆசியாவின் ஆச்சரியம் என்ற இலக்கை எட்டும் எண்ணத்துடனேயே தொடர்ந்தும் செயலாற்றவுள்ளோம் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment