1/08/2011

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2011 20ம் திகதி முதல் 27வரை வேட்பு மனுக்கள் ஏற்பு தேர்தல் ஏற்பாடுகளில் கட்சிகள் மும்முரம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படுமென தேர்தல்கள் செயலகம் நேற்று அறிவித்துள்ளது. சுயேச்சைக் குழுக்கள் 26ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் தேர்தல் செயலகம் கூறியது.
தேர்தல்கள் மார்ச் மாத நடுப் பகுதியில் நடைபெறவுள்ளதோடு தேர்தல் நடைபெறும் சரியான திகதி 27ஆம் திகதி பகல் தேர்தல் ஆணையாளரினால் அறிவிக்கப்பட உள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் குலதுங்க கூறினார்.
260 பிரதேச சபைகள், 39 நகர சபைகள் மற்றும் 4 மாநகரசபைகள் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் கலைக்கப்பட்டன. இதனையடுத்து தேர்தல் செயலகம் தேர்தலுக்கான ஏற் பாடுகளை முன்னெடுத் துள்ளது. 30 வருடங்களின் பின்னர் வடக்கு மாகா ணத்தில் தேர்தல்கள் நடைபெற உள்ளதோடு, வேட்பு மனுக்கள் கையேற்பதற்கான செயற்பாடுகள் நாடுபூராவும் உள்ள மாவட்ட செயலகங்களினூடாக மேற் கொள்ளப்பட உள்ளன.
உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப் படுவதற்கு முன்னரே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பா ளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரியுள்ளதோடு ஜனவரி 15ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படவுள்ளதாக கட்சி செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன அறிவித்துள்ளார். இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான
விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சு. க. வேட்புமனுக் குழு நேர்முகப் பரீட்சையின் பின் தகுதியான வர்களை தெரிவு செய்ய உள்ளது. இதேவேளை ஐ.தே.க.வும் வேட்பாளர்களிட மிருந்து விண்ணப்பங்களை திரட்டி வருவதோடு தமக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள தாக கட்சியின் பேச்சாளர் ஜயந்த கருணா திலக எம்.பி. கூறியுள்ளார். வேட்பு மனுக் குழு தகுதியானவர்களை தெரிவு செய்யும் என அவர் தெரிவித்தார்.
விசேட கமிட்டி ஊடாக வேட்பாளர்களை தெரிவு செய்ய உள்ளதாக ஜே.வி.பி. தெரிவித் துள்ளது. தமது கட்சிக்கும் பெருமளவு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக ஜே.வி.பி. பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இதேவேளை தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தமிழ் கட்சி வட்டாரங்கள் கூறின. இது தொடர்பில் தமிழ்கட்சிகளிடையே பேச்சு நடைபெறுவதாக அறிவிக்கப்படுகிறது. சில தமிழ் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது குறித்து பேசி வருவதாக த. தே. கூட்டமைப்பு எம்.பி. அரியநேந்திரன் கூறினார். 2ஆம் திகதிக்கு முன் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது கட்சி போட்டியிடும் என்று அவர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment