.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள உள்ளுராட்சி சபை தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 882 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் இவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1இலட்சத்து 56 ஆயிரத்து 445 வாக்ககாளர்களும், கல்குடா தொகுதியில் 97 ஆயிரத்து 703 வாக்காளர்களும், பட்டிருப்பு தொகுதியில் 81ஆயிரத்து 734 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை உட்பட 10 பிரதேச சபைகள் அடங்கலாகக 12 உள்ளுர் அதிகார சபைகளுக்கு தேர்தல்ககள் நடைபெறவுள்ளன. இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் மட்டக்களப்பு மாநகர சபையை தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் கூட்டணியுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முணன்னணியும், காத்தான்குடி நகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும்,ஒட்டமாவடி பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சுதந்நிர முன்னணியும், ஏறாவூர் நகர பிரதேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் ககாங்கிரசும், எனைய 7 பிரதேச சபைகளை தமிழ் மகக்கள் விடுதலை புலிகளும் கைப்பற்றியிருந்தமை
0 commentaires :
Post a Comment