இந்த மீனவர்களுக்கும் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்
1/31/2011
| 0 commentaires |
கிழக்கில் வாவி மீன்களுக்கு நோய்
இந்த மீனவர்களுக்கும் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்
| 0 commentaires |
புலிகளின் ஆதரவாளர்களுக்கு பதில்கூற நேரமில்லை : அரசாங்கம்
மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமைகள் அமைப்புகள் வலியுறுத்தியமை தொடர்பிலேயே ஜனாதிபதியின் புதிய ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி குறித்து சிந்திப்பதாகவும் அவற்றுக்கிடையில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் குறித்து கண்டுகொள்ள தேவையில்லை என பந்துல ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்
| 0 commentaires |
எகிப்திய ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சி ஆட்டம் காண்கிறது
அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஐந்து நாட்களாக மக்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினாலும், வன்முறைகளினாலும், எகிப்தின் தலைநகரம் கெய்ரோவில் பல கட்டடங்களும் நூற்றுக் கணக்கான வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
எகிப்திலுள்ள 80 மில்லியன் மக்கள் வறுமையில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசாங்கம் அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்து வருகின்ற போக்கை கண்டித்தே மக்கள் இன்று அங்கு அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளார்கள். மக்களின் கிளர்ச்சியை பொலிஸ் அதிரடிப்படை மூலம் தடுத்து விடுவதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்திய போதும் மக்கள் பொலிசாரின் தாக்குதலை முறியடித்து கெய்ரோ நகரை ஒரு யுத்தகளமாக மாற்றியுள்ளார்கள்.
82 வயதான ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு செவிமடுத்து அந்நாட்டின் புலனாய்வுப் பிரிவின் அதிபர் ஒமர் சுலைமானை தனது உப ஜனாதிபதியாக நியமித்து மக்களை சாந்தப்படுத்த முயற்சி செய்த போதிலும் அம்முயற்சியை நிராகரித்த மக்கள் ஹொஸ்னி முபாரக் இராஜிநாமா செய்தால்தான் எகிப்து மக்களுக்கு சுதந்திரமும் பொருளாதார சுபீட்சமும் ஏற்படும் என்று தெரிவித்து தங்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேலும் அதிகரித்துள்ளனர்.
ஹொஸ்னி முபாரக்கின் மகன் கமால் முபாரக் தமது தந்தைக்குப் பின்னர் தான் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியுமென்று கனவு கொண்டிருந்த போதிலும் அவரது இந்த இலட்சியக் கனவும் மக்கள் ஆர்ப்பாட்டத்தினால் சின்னாபின்னாமாகியுள்ளது.
எகிப்தின் பதினைந்து மில்லியன் பலம்வாய்ந்த பொலிஸ் படையும் அங்கு ஜனாதிபதியை ஆதரிப்பதற்கு தயக்கம் காட்டும் பலவீன நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதனால் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் விரைவில் பதவியை இராஜினாமா செய்வார் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.
இது போன்றே இரண்டு வாரங்களுக்கு முன்னர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து டியூனீசியாவின் தலைவரை இராஜிநாமா செய்ய வைத்தனர். இன்று வட அமெரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பு வலுப்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் இளைஞர்களின் வேலையற்றோர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருப்பதே அங்கு முபாரக்கின் அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்கள் வலுவடைவதற்கு பிரதான காரணமாகும்.
ஊரடங்கு சட்டம் எகிப்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அதனை உதாசீனம் செய்து தொடர்ந்தும் கடைகளை கொள்ளையிட்டும், வர்த்தக நிலையங்களை சேதப்படுத்தியும் வருகிறார்கள். இந்த கலவரங்களை அடக்குமாறு அரசாங்கம் இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பித்த போதிலும் இராணுவத்தினர் இது விடயத்தில் அதிக ஆர்வம் காண்பிக்காமல் இருந்து வருவதாகவும் அங்குள்ள அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.
| 0 commentaires |
புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ முன்வர வேண்டும்
பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினால் நாடு பிரகாசிக்கும்
30 ஆண்டு கால பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி நாட்டைப் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கு உதவ முன்வர வேண்டும் எனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் நாடு திரும்பி தமது நாட்டின் எந்தப் பகுதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முதலீடு செய்து கைத்தொழில் மற்றும் பசுமைப்புரட்சி ஒன்றை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் பிரதி அமைச்சர், இதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.
மக்கள் எதிர்நோக்கியிருந்த 30 ஆண்டு கால பயங்கரவாத அச்சுறுத்தலை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது நேர்மையான, பாரபட்சமற்ற ஆளுமையின் மூலம் நீக்கி, இன்று நாட்டில் பூரண சமாதானத்தையும் அமைதியையும் மக்களிடையே ஐக்கியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தில் இந்நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத, இன பேதமற்ற முறையில், எமது நாட்டின் பொருளாதாரத்தை மறுமலர்ச்சி செய்யும் இன்னுமொரு பாரிய யுத்தத்தில் இறங்கியிருக்கும் ஜனாதிபதி அவர்களுக்குத் தங்களின் பூரண ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய அரசாங்கம், பெரும்பான்மை மக்களின் சமயமாகிய பெளத்தத்திற்கு அளித்துள்ள அதே மதிப்பையும், கெளரவத்தையும் முக்கியத்துவத்தையும் மற்ற மதங்களுக்கும் வழங்கியிருக்கிறது. அதுபோன்றே, சிங்கள மொழிக்கு அளிக்கப்படும் மதிப்பும், அந்தஸ்தும் தமிழ் மொழிக்கும் வழங்கப்படுகிறது.
அரசாங்க சேவையில் தமிழ் கற்றறிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற காரணத்தினால், சிறுபான்மை மக்களுக்கு தமிழ் மொழி மூலம் அரசாங்கத்தின் நிர்வாக சேவையை பெற்றுக் கொடுப்பதில் சில சந்தர்ப்பங்களில் ஆளணி பற்றாக்குறை காரணமாக அசெளகரியமாக இருந்தாலும், வெகுவிரைவில் நாம் தமிழ் மொழியையும் கற்றறிந்தவர்களையே அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ளும் புதிய கொள்கையை நிறைவேற்ற இருக்கிறோம் என்றும், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
கடந்த காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வாழும் எங்கள் நாட்டின் புலம்பெயர்ந்த தமிழ் மற்றும் சிங்கள, முஸ்லிம் மக்கள் கூடிய விரைவில் தாயகம் திரும்பி, இங்கு தங்கள் அமைதியான வாழ்க்கையை தொடர்ந்தும் மேற்கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்காகவும் உழைக்கும் ஜனாதிபதி அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதியமைச்சர், இந்த கோரிக் கையை புலம்பெயர்ந்த மக்கள் நிறை வேற்றினால் இந்நாடு சுதந்திரம் பெறு வதற்கு முன்னர் இருந்த யுகத்திற்கு மீண்டும் மாறி, அனைத்து மக்களும் எவ்வித பேதமும் இன்றி, ஒருதாய் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழும் ஒரு யுகம் நிச்சயம் உருவாகும் என்று கூறினார்.
அரசாங்கம் சிங்கள மக்களுக்கு முன் னுரிமை வழங்கி சிறுபான்மை மக்களை ஓரங்கட்டும் கொள்கையை என்றுமே கடைப் பிடிக்கப் போவதில்லை. இன்று நாட்டில் தோன்றியுள்ள அமைதியும், சமாதானமும், ஐக்கியமும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றார்.
இந்நாட்டு மக்கள் அனைவரும் எமது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக் காக தங்கள் முழுமையான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும், அதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கட்டியெழுப்பலாம் என்றும் நியோமல் பெரேரா சுட்டிக் காட்டினார்.
வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த மக்கள் இங்கு வந்து, நாட்டின் எந்தப் பகுதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் முதலீடு செய்து, கைத்தொழில் மற்றும் பசுமைப் புரட்சி ஒன்றை ஏற்படுத்தினால், நாடு தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் பிரகாசிப்பதை எந்தவொரு சக்தியினாலும் தடுத்துவிட முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், சில தேசத்துரோக சக்திகள் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வந்த பொய்ப் பிரசாரங்களை நம்பி, பல வல்லரசுகள் எமது நாட்டை சந்தேகக் கண்ணோடு பார்த்து மறைமுகமாக பிரச்சினைகளையும், அழுத்தங்களையும் கொண்டுவந்த போதிலும், ஜனாதிபதி அவர்கள் அவற்றை பொருட்படுத்தாமல், நாட்டை பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டெடுத்து அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தியதனால், வெளிநாட்டு வல்லர சுகள் இலங்கைக்கு எதிராக தாங்கள் கடைப்பிடித்து வந்த தவறான கொள்கைகளை கைவிட்டு, இன்று எமது அரசாங்கத்துடன் நல்லுறவை வளர்த்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இன்று நீட்டிவரும் நேசக்கரத்தை எமது அரசாங்கம் வலுவாக பற்றி, உலக அரங்கில் இலங் கைக்கு கடந்த காலத்தில் இருந்து வந்த அபகீர்த்தியை இல்லாமல் செய்வதில் வெற்றி கண்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நியோமல் பெரேரா, எமது நாட்டிற்கு அச்சுறுத்தல் தோன்றியிருந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எங்களுக்கு முழுமனதுடன் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி வந்த, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் நாம் என்றென்றும் நன்றியுணர் வுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வோம் என்றும் கூறினார்.
தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தி, நாட்டை சகல துறைகளிலும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் இந்த அரசா ங்கத்தின் கரங்களை இலங்கையிலும், வெளிநாடுகளிலுமுள்ள எமது நாட்டு பிரஜைகள் அனைவரும் வலுப்படுத்தி, பூரண ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
| 0 commentaires |
கிளிநொச்சி மாவட்டம்;
தமிழரசுக் கட்சி ஆதரவாளர்
மத்தியில் பலத்த அதிருப்தி
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்பாளர் தெரிவிலும் நியமனப்பத்திர தாக்கலில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களிடையே பலத்த அதிருப்தி ஏற்பட்டுள்ளதுடன் இதுவிடயத்தில் பாரபட்சமும் குளறுபடிகளும் மேற்கொண்டவர்கள் மீது கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
பளை பச்சிலைப்பள்ளிக்கும், பூனகரிக்கும் 26ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு தமிழரசுக் கட்சியின் இரு எம்.பிக்களால் சரிபார்க்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி கச்சேரியில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இவ் விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறுகளால் நிராகரிக்கப்பட்டது.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு தமிழரசுக் கட்சியில் போட்டியிட அங்குள்ள பிரதேசவாசிகள் மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து கிளிநொச்சியில் இருந்தே வேட்பாளர்களை ஒப்பமிடவைத்து நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அதில் கிளிநொச்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட புலிகளுக்கு உடந்தையாக இருந்து பொதுமக்களை இம்சித்து வந்த ஒரு ஓய்வுபெற்ற கிராம அலுவலரும், பரீட்சைப் பத்திரத்தில் குளறுபடி செய்து வேலை இழந்த கிராம அலுவலரும் அடங்கி இருந்ததாகவும் தினகரனுக்குத் தெரிவிக் கப்பட்டது.
இதேவேளை, எம்.பி. ஸ்ரீதரனின் நெருங்கிய உறவினர்களையே கரைச்சி பிரதேச சபைக்கு வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாகவும் உண்மையாக நியமனம் செய்ய வேண்டிய தமது விண்ணப்பங்கள் திட்டமிட்டு நிரா கரிக்கப்பட்டதாகவும் அதிக அளவு வாக் காளர்களை கொண்ட கிளிநொச்சி நகர வட்டாரத்திற்கு தமிழரசுக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரையும் நிறுத்தப்பட வில்லை எனவும் கிளிநொச்சி நகர் வாக்காளர்களும் முக்கியஸ்தர்களும் தெரிவித்தனர். நகர அபிவிருத்தி குறித்து இக்கட்சி காட்டும் அக்கறையீனத்திற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
1/30/2011
| 0 commentaires |
சிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும் வ உ சிதம்பரம் அனுப்பிய கப்பலும் ! எஸ்.எம்.எம்.பஷீர்
பொய்மை தீர, மெய்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய
வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி) “
சுப்ரமணிய பாரதி
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.
ஆக மொத்தத்தில் பாரதி கண்ட சேதுவை மேடுறுத்தம் கப்பல் கால்வாய் திட்டம் அவ்வப்போது மேலெழுந்து மீண்டும் மூழ்கி அரசியல் சர்ச்சைக்குள் அவதியுறும் ஒரு திட்டமாக -கனவாக-இருக்கிறது. ஆனால் வ..உ சி கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் கப்பல் ஓட்டி காட்டியது ஒருபுறம்மிருக்க பின்பு இலங்கையில் தலை மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் மிடையே பயணிகள் கப்பல் சேவை நடைபெற்று வந்ததும் அது வடக்கில் ஆயுத பயங்கரவாதம் காலுான்ற தொடங்கியதும் இடை நிறுத்தப்பட்டதும் பின்னர் பல தசாப்தங்களுக்கு பின்னர் மீண்டும் இப்போது இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வட புலத்தில் இந்திய பூர்வீக திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் (திருவேங்கடம் எனும் பெயர் இலங்கை வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களால் சூட்டப்படும் பெயர் அல்ல ) இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டு அழிக்கப்பட்டு போனபின் தென் இந்திய வடபுல இலங்கை கடல் வழி சுதந்திர பயணங்கள் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி யின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு சுதந்திர நடமாட்டத்தின் ஒரு அம்சமாகவே இக்கப்பல் கப்பல் ஒட்டிய தமிழனை நினைவூட்டி புறப்பட போகிறது.
0044- 7939095467
| 0 commentaires |
பதவிக்காக பறந்து திரியும் கூட்டமைப்புக்குள் குத்துவெட்டுக்கள் முடிந்தபாடில்லை
இது தொடர்பில் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் ஈ.பி.ஆர்.எல். எவ். கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும், ரெலோ பொதுச் செயலாளர் அ.செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை விடுத்துள்ளனர். அதன் முழு விபரத்தை இங்கு தருகிறோம்.
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் பொருளாளர் திரு.குலநாயகம் அவர்களுக்கும் திரு.சிவாஜிலிங்கம் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கூட்டும், ஒப்பந்தமும் அவர்களுக்கிடையில் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட கூட்டாகவே, தமிழரசுக்கட்சியின் செயலாளர் திரு.மாவை சேனாதிராசா அவர்களால் கூறப்படுகின்றது.
திரு.சிவாஜிலிங்கம் அவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைப்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எந்தப் பேச்சு வார்த்தைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இடம் பெறவில்லை. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஓரிரு அமைப்புகள் உள்வாங்கப்பட்டதற்கு பெரும்பான்மையான த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இருந்த பொழுதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் கேட்டதற்கிணங்க அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. திரு.சிவாஜிலிங்கம் அவர்களின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டுப் பின்னர் அதனைப் பற்றி முடிவெடுப்பதாயிருந்தது.
ஆனால், அந்த முடிவுக்கு முரணாக, தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கிடையிலான ஒப்பந்தம் என்ற பெயரில் அவர் தமிழரசுக் கட்சியில் உள்வாங்கப்பட்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பட்டுள்ளார். இது கூட்டமைப்பு எடுத்த முடிவுகளுக்கு எதிராக திரு.மாவை சேனாதிராசா அவர்கள் தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் எடுத்த தனிப்பட்ட முடிவாகும்.
திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் கிளிநொச்சியிலும், வன்னியின் ஏனைய மாவட்டங்களிலும் டாக்டர் விக்கிரமபாகு கருணாரத்னா அவர்களின் தலைமையிலான கட்சியில் வேட்பு மனுக்களை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார். அது மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் தமிழத்; தேசிய கூட்டமைப்புக்கும் ஓர் பாடம் படிப்பிக்க இருப்பதாக இரு தினங்களுக்கு முன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில், வல்வெட்டித்துறையின் நகர சபைக்கு திரு.குலநாயகம் அவர்கள் 2 வருடமும் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் 2 வருடம் தலைவராக இருப்பது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியில் இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
மேலும், திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் வல்வெட்டித்துறை நகரசபைக்குத் தானே முதன்மை வேட்பாளர் என ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். ஆனால், கூட்டமைப்பின் எந்த ஓர் பட்டியலிலும் யாரும் முதன்மை வேட்பாளர்கள் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், திரு.சிவாஜலிங்கம் அவர்கள் தன்னைத்தானே முதன்மை வேட்பாளராக அறிவித்தது தவறானது என்பதையும், யார் விருப்பு வாக்குகள் அதிகம் பெற்றுக் கொள்கின்றார்களோ அவர்களே பிரதேச, நகர சபைகளின் முதல்வர்களாகத் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதையும்; தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யப்படாததால் தமிழரசுக்கட்சி சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டியிருக்கின்றது.
1/29/2011
| 0 commentaires |
ஈராக்கில் இறுதிச் சடங்கில் கார் குண்டு வெடிப்பு: 40 பேர் பலி; 80 பேர் காயம்
ஆனாலும், இந்த குண்டு வெடிப்பில் 40 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். படுகாயங்களுடன் 80க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
குண்டு வெடிப்பால் ஆத்திரமடைந்த பொது மக்கள், பொலிஸார் சரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். பொது மக்களில் சிலர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கலவரக் காரர்களை கலைக்க பொலிஸாரும் திருப்பி சுட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் யாரும் பலியானார்களா? என்ற விவரம் தெரியவில்லை.
ஷியா பிரிவைச் சேர்ந்த பிரதமர் நூரி அல்- மாலிக் தலைமையில் மீண்டும் அமைந்த அரசுக்கு சவால் விடும் வகையில் இந்த குண்டு வெடிப்பை சதிகாரர்கள் நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த பெரிய குண்டு வெடிப்பு தவிர பாக்தாத் நகரில் மேலும் 4 இடங்களில் குண்டுகள் வெடித்ததாகவும், இதில் பலர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| 0 commentaires |
டூனிசியா, எகிப்தை தொடர்ந்து யெமனிலும் போராட்டம்
அங்கு நடந்த போராட்டம் வெற்றியடைந்ததால், தற்போது எகிப்திலும் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. தற்போது இந்த போராட்டம் யெமனையும் தொற்றிக்கொண்டுள்ளது.
யெமன் நாட்டு ஜனாதிபதி அலி அப்துல்லா சலே 32 ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ளார். இவரது பதவிக் காலம் 2013இல் முடிவடைகிறது. அதற்குள் தன்னுடைய மகனை ஜனாதிபதியாக்க முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
யெமன் நாட்டின் மக்கள் தொகையில், பாதி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் தான் வசிக்கின்றனர். சாலை வசதி, சுகாதார வசதி ஏதும் இல்லாததால் வெகுண்டெழுந்த இளைஞர்களும், எதிர்க்கட்சியினரும் தற்போது ஜனாதிபதி அப்துல்லா சலேயை பதவி விலகக் கோரி, தலைநகர் சனாவில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி பதவி விலகுவதைத் தவிர வேறு எந்த சமாதானத்தையும் நாங்கள் ஏற்க தயாராக இல்லை என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை எகிப்தில் ஹொஸ்னி முபாரக் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் உள்துறை அமைச்சு இணையதளம், கையடக்க தொலைபேசி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டுள்ளன. தலைநகரான கெய்ரோ முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தது.
யெமன் நாட்டில் ஜனாதிபதி பதவி விலகக் கோரி, எதிர்க்கட்சியினரும் இளைஞர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. டூனிசியாவில் ஜனாதிபதி அபிதின்பென் அலியை பதவி விலகக் கோரி நடந்த போராட்டத்தின் காரணமாக அவர் தலைமறைவாகி சவூதியில் தஞ்சம் புகுந்தார். அங்கு நடந்த போராட்டம் வெற்றியடைந்ததால், தற்போது எகிப்திலும் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. தற்போது இந்த போராட்டம் யெமனையும் தொற்றிக்கொண்டுள்ளது.
யெமன் நாட்டு ஜனாதிபதி அலி அப்துல்லா சலே 32 ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ளார். இவரது பதவிக் காலம் 2013இல் முடிவடைகிறது. அதற்குள் தன்னுடைய மகனை ஜனாதிபதியாக்க முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். யெமன் நாட்டின் மக்கள் தொகையில், பாதி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் தான் வசிக்கின்றனர்.
சாலை வசதி, சுகாதார வசதி ஏதும் இல்லாததால் வெகுண்டெழுந்த இளைஞர்களும், எதிர்க்கட்சியினரும் தற்போது ஜனாதிபதி அப்துல்லா சலேயை பதவி விலகக் கோரி, தலைநகர் சனாவில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி பதவி விலகுவதைத் தவிர வேறு எந்த சமாதானத்தையும் நாங்கள் ஏற்க தயாராக இல்லை என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை எகிப்தில் ஹொஸ்னி முபாரக் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் உள்துறை அமைச்சு இணையதளம், கையடக்க தொலைபேசி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டுள்ளன. தலைநகரான கெய்ரோ முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தது
| 0 commentaires |
காலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் சில தினங்களுக்கு கனத்த மழை
இம்மாற்றத்தின் விளைவாக கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு கனத்த மழை பெய்யும் என்னும் அவர் கூறினார்.
நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை வீழ்ச்சி ரன்டம்பே நீரேந்து பகுதியில் 100.5 மில்லி மீற்றர்களாகப் பெய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது வடகீழ் பருவபெயர்ச்சி மழைக்கால நிலையே நிலவுகின்றது. என்றாலும் வடகிழக்காக நாட்டுக்குள் வருகின்ற காற்றில் சீரற்ற தன்மை திடீரென ஏற்பட்டிருகின்றது. இதன் விளைவாக கிழக்கு, தெற்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் இடையிடையே கனத்த மழை பெய்யக்கூடிய காலநிலை ஏற்பட்டிருக்கின்றது. அதேநேரம் பிற்பக லிலோ, மாலைவேளையிலோ சப்ர கமுவ, மேல், மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்
இடி, மின்னலுடன் மழை பெய்யும். இதேவேளை கிழக்கு மற்றும் மன்னார் கடற்பரப்புக்கள் சிறிதளவில் கொந்தளிப்பாகக் காணப்படும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி பதுளை, ஹந்தகெட்டியவில் 93.3 மி. மீ. மகியங்கனையில் 77.9 மி. மீ., ரந்தெனிகலயில் 74.5 மி. மீ. என்ற படி மழை பெய்துள்ளது என்றார்.
பட்டிப்பளை நிருபர்
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடி முழக்கத்துடன் கூடிய மழை பெய்து வருகினறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற கடந்த 45 மணி நேரத்தில் 68.5 மில்லி மீற்றர்மழை பெய்துள்ளதாகவும் இவ்வருடம் 2011 ஜனவரி மாதம் கடந்த 27 நாட்களில் 1342.1 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதகாவும் மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எஸ். சிவதாஸ் தெரிவித்தார்.
தற்போதைய மழையின் காரணமாக வெள்ளம் வடிந்து சூரிய ஒளியில் நிமிர்ந்த மரங்கள், மீண்டும் நீர் ஊற்றுக் காரணமாக நிலத்தில் சாய்கின்றன. ஈரலிப்பான மண் வீடுகள் விழுவதுடன், நுளம்புப் பெருக்கமும் அதிகமாயுள்ளது. எஞ்சிய மேட்டில் இருந்த வேளாண்மை அறுவடை முற்றாகப் பாதிப்படைந்துள்ளன.
கிராமங்களினுள் பாம்புகள், முதலைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளன. பல கால்நடைகள் இறந்து வரும் நிலையில் நோய்களும் அதிகரித்து வருகின்றது.
தொடர்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக உள்ளதுடன் கடும் குளிரும் உணரப்படுவது குறிப்பிடத்தக்கது
1/28/2011
| 0 commentaires |
மன்னார்; கடற்படுகையில் எண்ணெய் அகழ்வு ஆய்வு பணிகள் ஜ_ன் முதலாம் திகதி ஆரம்பம்
இந்தத் தகவலை பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நீல் டி சில்வா தெரிவித்தார்.
இந்தக் கேள்விப் பத்திரங்களைப் பரிசீலனை செய்து அதில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சந்தைப்படுத்தல் ஆலோசகர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மன்னார் கடற்படுகையின் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.
ஜனவரி மாத முடிவில் கேள்விப் பத்திரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக பிரதான நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும்.
கெயின்ஸ் லங்கா நிறுவனம் இன்று எண்ணெய் அகழ்வு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களையும் சேவைகளையும் வழங்கி அங்கு பணிகளை துரித வேகத்தில் மேற்கொள்ள உதவி வழங்கி வருகின்றது.
இந்த நிறுவனம் மன்னார் கட ற்படுகையில் உள்ள மூன்று பாரிய எண்ணெய் கிணறுகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியை ஏற்றுக்கொண்டுள்ளது.
கேன்ஸ் லங்கா நிறுவனம் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆழ்கடலில் பணி புரிபவர்களுக்கென உணவு போன்ற பொருட்களையும் ஏனைய அத்தியாவசிய வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக கப்பல்களை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கும், எண்ணெய் அகழ்வு மற்றும் ஆய்வுப் பணிகளையும், காலநிலை பற்றி முன்கூட்டியே அறிவிப்பதற்கான பணிகளையும் சரியான முறையில் செய்வதற்கான உப ஒப்பந்தக்காரர்களையும் சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.
இந்த எண்ணெய் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுப வர்களுக்கு எரிபொருள் நீர், மற்றும் வைத்திய வசதிகளும் இந்த உப ஒப்பந்தக்காரர்களால் செய்யப்படும்.
| 0 commentaires |
சிறுபான்மைக் கட்சிகள் தனித்தும் இணைந்தும் போட்டி
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுகின்றது.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், பிரஜைகள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்து களமிறங்கியுள்ளன.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுந்தரப்புடன் இணைந்து போட்டியிடுகின்றது. ஏறாவூர், காத்தான்குடி நகர சபைகள், ஓட்டமாவடி பிரதேச சபை ஆகியவற்றில் இந்தக் கட்சி இணைந்து போட்டியிடுவதாக அதன் தலைவர்களுள் ஒருவரான பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஓட்டமாவடி பிரதேச சபையில் தனித்தும், ஏறாவூர் நகர சபையில் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது வேட்பாளர்களை களம் இறக்கியிருப்பதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரஜைகள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஆளும் அரசாங்க கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வவு னியா மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் நேற்று வியாழக்கிழமை வேட்பு மனுவை வவுனியா தேர்தல் காரியா லயத்தில் தாக்கல் செய்தது.
ன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறூக் வேட்பு மனுவை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பு மனுவை நேற்றுக் காலை கையளித்துள்ளது.
முக்கியமான தேர்தலாக இது அமைந்துள்ளதினால் அபிவிருத்தியை பிரதான நோக்கமாகக் கொண்டு நாம் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் சனநாயகக் கட்சி, ஈரோஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடைய பிரதிநிதிகள் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என குறிப்பிட்ட பாறூக் எம்.பி. இன ஐக்கியமும் ஜனநாயகமும் கட்டியெழுப்ப முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
அத்தோடு இந்த அரசாங்கத்தின் மீது மக் கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என் பதினை தேர்தல் பெறுபேறுகள் எடுத்துக் காட்டும் எனவும் சொன்னார். அதேநேரத்தில் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வவுனியா தமிழ் பிரதேச சபைகளுக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. மூன்று சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுலை முன்னணி ஆகியனவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
மலையக மக்கள் முன்னணியின் வே. இராதாகிருஷ்ணன் எம்.பீ. தொழிலாளர் தேசிய முன்னணியின் பீ. திகாம்பரம் எம்.பீ, முன்னாள் எம்.பீக்கள் வீ. புத்திர சிகாமணி, எஸ். அருள்சாமி ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள மலையக தமிழ்க் கூட்டமைப்பு அம்பகமுவ, கொத் மலை பிரதேச சபைகளுக்கு மயில் சின் னத்திலும், ஏனையவற்றுக்கு மண்வெட்டிச் சின்னத்திலும் போட்டி யிடுகின்றது.
இது இவ்வாறிருக்க நுவரெலியா, லிந்துலை, தலவாக்கலை பிரதேச சபைகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சி வேட்பாளர்களை நிறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ¤க்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி அக்கரைப்பற்று மாநகர சபைக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கும் மாத்திரம் தனித்துப் போட்டியிடுகிறது. கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கு ஐ. ம. சு. மு. உடன் இணைந்து போட்டியிடுகின்றது. தனித்துவத்தை காக்கும் வகையில் தமது கட்சி இரு உள்ளூராட்சி சபைகளுக்கு தனித்துப் போட்டியிடுவதாகக் கூறியது.
| 0 commentaires |
சென்னை மகாபோதி விகாரை தாக்குதலுக்கு உலகெங்கும் பலத்த கண்டனக் குரல் எழுந்துள்ளது
இந்த தாக்கு தல் பற்றிய தகவல் கிடைத்தவுடன் அந்த ஸ்தானத்திற்கு விரை ந்து சென்ற, இந்தியாவில் இருக்கும் இலங்கை துணை உயர்ஸ் தானிகர் திரு. கிருஷ்ணமூர்த்தி, நிலைமையை நேரில் அவதா னித்தார்.
திரு. கிருஷ்ணமூர்த்தி உடனடியாக தமிழக அரசின் முக்கியஸ்தர் களுடன் தொடர்பு கொண்டு, இந்த அசம்பாவிதம் குறித்து அறி வித்ததுடன், தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக சென்னையில் உள்ள இலங்கை நிறுவனங்கள் மீதான பாதுகாப்பை வலுப்படுத் தியது.
தமிழகத்தில் உள்ள இலங்கை வங்கி, இலங்கை வங் கிக்கிளை, ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கிளை, மாபோதி சங்கத்தின் காரியாலயம் மற்றும் விடுதிகளுக்கு 24 மணி நேரமும் கூடுதல் பாதுகாப்பை அளிப்பதற்கு தமிழக அர சாங்கம் உத்தரவு பிறப்பித்ததாக திரு. கிருஷ்ணமூர்த்தி அறிவித் துள்ளார்.
இதேவேளையில், மகாபோதி தாக்குதல் தொடர்பாக, தமிழக அர சின் தலைமைச் செயலாளர் எஸ். மாலதியையும், எமது துணை உயர்ஸ்தானிகர் கிருஷ்ணமூர்த்தி அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்தார்.
இனம் தெரியாத நபர்களினால், நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்திற்கு தலைமைச் செயலாளர் மாலதி, கவ லையும் கண்டனத்தையும் தெரிவித்த பின், இலங்கையின் சகல நிறுவனங்களுக்கும் தமிழக அரசாங்கம் பூரண பாதுகாப்பை அளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னணியில் அரசியல் இருக்க வில்லை என்று, தமிழகத்தில் உள்ள அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள். வேண்டுமென்றே பிரச்சினைகளை ஏற் படுத்தி, இலங்கை இந்திய உறவை மாசுபடுத்த எத்தனிக்கும் சில சுயநலவாத விசமிகளே இந்த தாக்குதல்களுக்கு பின்னணி யில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மகாபோதி சங்கத்தின் சென்னையில் உள்ள காரியாலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் குறித்து, இப்போது உலகெங்கிலுமுள்ள சமாதானத்தை விரும்பும் மனித நேயம் படைத்தவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவத்தில் சிறுகாய ங்களுக்குட்பட்ட பெளத்த பிக்குமார்களின் நலனை கவனிப் பதற்காக, புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவிலுள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகர் பிரசாத் காரிய வசம், இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் புதுடில்லியி லிருந்து உடனடியாக சென்னைக்கு சென்று, தமிழ்நாடு முத லமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களையும், ஏனைய முக்கியஸ்தர்களையும் சந்தித்து, இந்த சம்பவம் குறித்து இல ங்கை அரசாங்கத்தின் கவலையை தெரிவித்து, சென்னையில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கான பாதுகாப்பையும், இந்தியா வின் புனித பெளத்த தலங்களை தரிசிக்க செல்லும் இலங்கை மக்களுக்கும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார்.
சென்னையில் இருக்கும் மகாபோதி சங்கத்தின் விகாரை மற்றும் காரியாலயத்திற்கும் இதற்கு முன்னர் இது போன்ற எவ்வித தாக் குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக் கது.
சில விசமிகள் இத்தகைய தாக்குல்களை சென்னையில் உள்ள பெளத்த புனித தலங்கள் மீது, மேற்கொள்வதன் மூலம் சிங்கள பெளத்தர்களின் உணர்வை தூண்டிவிட்டு, மீண்டும் 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்றது போன்ற, இனக் கலவரங்களுக்கு இல ங்கையில் தூபம் இடலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த போதிலும், இலங்கை மக்கள் இத்தகைய சம்பவங்களை பார்த்து, ஆத்திரமடையமாட்டார்கள் என்று ஒரு புத்தி ஜீவி தெரிவித் தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின், இன்றைய அரசாங்கம், நாட்டில் தோற்றுவித்திருக்கும் சமாதானமும், இன ஒற்றுமையும் சகல மக்களிடையேயும் இருந்து வரும் தேசபற்றுடனான ஐக்கி யமும், எக்காரணம் கொண்டும் இனிமேல் சீர்குலைந்து விடும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இனிமேல், இலங்கையில் இனங் களுக்கு இடையே பகைமையுணர்வோ, சந்தேக உணர்வோ ஏற் படுவதற்கான வாய்ப்பு இருக்காது. இலங்கை மக்கள் சென்னை யில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் போன்ற சதி முயற்சி களுக்கு பகிரங்கமாக கண்டனத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், நாட்டின் இன ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்து வதற்கு சிறிதேனும் தயக்கம் காட்டமாட்டார்கள் என்று நாம் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறோம்
1/27/2011
| 0 commentaires |
எகிப்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் மூவர் பலி
எகிப்திய அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் பொலிஸ் அதிகாரி என்றும், ஏனைய இருவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் என்றும் அந்நாட்டு அரசாங்கத் தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
துனீசியாவில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து எகிப்திய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் கய்ரோ நகரில் நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டு இரவு இரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்குப் பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும், ஆர்ப் பாட்டக்காரர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. எகிப்திய ஜனாதிபதி ஹொசின் முபாரக் 1981 ஆம் ஆண்டு முதல் ஆட்சி நடத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சி நடத்திவரும் எகிப்திய ஜனாதிபதி அந்நாட்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார். எகிப்தின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலையை அபிவிருத்தி செய்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்
| 0 commentaires |
இந்தியாவின் பாதுகாப்பு, விண்வெளி ஏற்றுமதி தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நிறுத்த அமெரிக்கா திட்டம்
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளுக்கான ஏற்றுமதிகள் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அத்துடன் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கிரமமாக திட்டமிடும் நாடுகளின் பட்டியலிட இந்தியாவையும் பராக் நிர்வாகம் சேர்த்துள்ளது.
இதன்படி ஒரு காலத்தில் நிராகரிக்கப்பட்ட நாடாக இருந்த இந்தியா தற்போது சர்வதேச ரீதியில் ஆயுத கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கூறியவாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை அமெரிக்க நிறுவனங்களும் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளில் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தெற்காசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக் கூறியுள்ளார்.
நியூயோர்க்கின் சைரக்கூல் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ரொபர்ட் பிளேக் உரையாற்றினார். அப்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் 1998 இல் இந்தியா மீது கட்டுப்பாடுகளை விதித்தன. அணு சோதனைகளை நடத்தியதன் மூலம் முழு உலகத்தையும் இந்தியா அதிர்ச்சிக்குள்ளாக்கியதையடுத்தே அமெரிக்கா இவ்வாறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தியா அணு சோதனை நடத்திய சில நாட்களுக்குள் பாகிஸ்தானும் அணு சோதனை நடத்தியது.
எனினும் அமெரிக்கா மீண்டும் இந்தியாவுடன் சமாதானத்துக்கு வந்தது. இதனையடுத்து 2008இல் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷ¤ம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டனர்.
அணு சக்தி விடயங்களில் ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் கூறியிருந்தது. எனினும் அப்போதும்கூட அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திட மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இந்தியாவின் விமானப்படையில் உள்ள பழைய விமானங்களுக்கு பதிலாக புதிய விமானங்களை விற்கும் முயற்சியிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு அங்கமாக அமெரிக்க வர்த்தக செயலாளர் கெரி லொக் அடுத்த மாத முற்பகுதியில் இந் தியா வருகிறார். அமெரிக்க - இந்திய வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் இவரது விஜயம் திட்ட மிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 24 வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய வர்த்தக குழுவொன்று அவருடன் கூடவே இந்தியா வருகிறது