12/22/2010

TMVP கட்சியை தடை செய்யக் கூறும் தகமை JVP க்கு கிடையாது.-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்

prasanthan-annan-photo1 தமிழ் பேசும் சமுகத்தின் ஏக்கத்தினையும் எதிர்பார்ப்பினையும் ஜனநாயகப்பாதையில் பயணித்து அபிவிருத்தி பெறுவதற்கு அமைக்கப்பட்ட மாகாண சபை ஆட்சியினை செவ்வனே செயற்படுத்துவதற்கு சிலர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைய அதி மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிநடத்தலின் மூலம் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கு மக்களின் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்ட த.மவி.பு கட்சியினை இல்லாமல் செய்யும் எந்த உரிமையும் JVPக்கு கிடையாது.
இனவாதங்களை பேசி பிரிவினைகளையே தூண்டி இரட்டை வேடம் போட்டு மக்களை குளப்பி குளிர்காயும் வேலையை நாங்கள் செய்யவில்லை இரத்தமும் சதையுமாக தியாகத்தின் வெளிப்பாடாக அமைக்கப்பட்ட கட்சி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் இறைமைகளுக்கு ஏற்பவே பதிவு செய்யப்பட்டுள்ள TMVP கட்சியையோ, SLMC, தேசிய காங்கிரஸ் கட்சியையோ கலைக்க வேண்டும் என்ற JVP மாகாண சபை உறுப்பினரின் வாதம் இனவாதத்தினை தூண்டும் செயலாகவே நாம் பார்க்கின்றோம். ஜனாதிபதியும் அரசும் இன் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த பாடுபடும் வேளையில் வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போன்ற கூற்றாகவே இதனை நாம் உற்றுநோக்குகின்றோம். தமிழ் பேசும் மக்கள் அனுபவித்து வந்த இன்னல்களைக் களைந்து வளம் மிக்க வலுவான கிழக்கு மாகாணக் கட்டமைப்பை அமைப்பதே  கௌரவ முதலமைச்சரின் நோக்கமாகும்  என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
பொறி என்ற பெயரில் சமாதானத்திற்கான உலக அமைப்பு வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் ஈழம் பிரிக்கும் முதற்படியே 13வது திருத்தச் சட்டமூலரம் எனக் குறிப்பிட்டு , மாகாண சபைக்கான அதிகாரங்கள் தேவையில்லை மாகாண சபை முறைமை தமிழ் பேசும் சமூகத்திற்கு  பூரணமாக அமுல்படுத்தினால் அவர்கள் பலப்படுவார்கள் அது பெரும்பான்மை சமூகத்திற்கு பாதிப்பு என்ற வகையில் பாரதூரமான இன குரோதத்தினை வெளியிட்டிருந்தது.
பிரசுரத்திற்கு எதிராக மாகாண சபை உறுப்பினர் எஸ். புஸ்ப்பராஸா கொண்டுவந்த கண்டனப்பிரேரரணைக்கு பதிலளித்த JVP உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ பொறி எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தை தானும் கண்டிப்பதாகவும் இனம் ரீதியாக வெளியிடப்படும் துண்டுப்பிரசுரங்களை கண்டிக்க முடியாது அப்படியானால் இனப் பெயருடன் இயங்கும் TMVP,SLMC, தேசிய காங்கிரஸ் கட்சிகளையும் முதலில் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட வேளையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சுமார் 2 மணி நேரம் வரை தொடர்ந்த விவாதத்தில் வீதி அபிவிருத்தி அமைச்சர் M.S. உதுமாலெப்பை கருத்து வெளியிடுகையில் நாட்டின் இன துவேசத்தினை மிகவும் பாரதூரமாக ஊட்டியதே JVP கட்சி அதன் உறுப்பினர்களுமே TMVP, SLMC, தேசிய காங்கிரஸ் சிறுபான்மைக் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்பது வேடிக்கைக்குரியது. அந்த அந்த சமூகம் சார்ந்த கட்சிகள் தாம் சார்ந்த சமூகத்திற்கு சேவை செய்வது இனத்துவேசம் அல்ல ஏனை சமூகத்தினை தட்டிப்பறிக்க முற்படுவதே இனக் குரோத செயல் அரசு சிறப்பாக நிதானமாக கையாளும் இவ்வேளையில் இது அனாகரீகமான செயல்  TMVP தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகர்ந்தன் தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அதாவுல்லா ஆகியோரின் பங்கும் கிழக்கு மாகாண சபை அமைப்பதற்கு முக்கியமனது அவ்வாறு அமைக்கப்பட்ட சபையில் இருந்தே நீங்கள் தூற’றுவது முறையற்றது எனவும் குறிப்பிட்டார். மாகாண சபை உறுப்பினர்களான கிருஸ்ணாணந்தராஜா, ரசாக் பரீட், கல்வி அமைச்சர் விமல வீர திஸ்ஸ்நாயக்க ஆகியோரு; இது தொடர்பாக காரசாரமாக சவிவதித்தமை குறிப்பிடத்தக்கது

0 commentaires :

Post a Comment