சீனாவில் சிறை வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் லியூ ஜியாபோவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்குவதென்ற தீர்மானத்தை கண்டித்துள்ள சீன அரசாங்கம், இந்த வைபவத்தை பகிஷ்கரிப்பதென்றும் அறிவித்துள்ளது. இந்நோபல் பரிசு வழங்கும் வைபவத்தில் கலந்துகொள்ளுமாறு விடுத்த அழைப்பை நோர்வேயின் ஒஸ்லோ நகரிலுள்ள இலங்கைத் தூதரகமும் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. சீனாவுடனான நட்புப் பாலத்தை வலுப்படுத்தும் எண்ணத்துடனேயே இலங்கை அரசாங்கம் இத் தீர்மானத்தை எடுத்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை, சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் பேணி பாதுகாக்கும் நல்லெண்ணத்துடன், இந்திய அரசாங்கமும் சீனாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் எண்ணத்துடன் இவ்வைபவத்தைப் பகிஷ்கரிப்பதென்று தீர்மானித்துள்ளது. இம்மாத நடுப்பகுதியில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜமொன்றை மேற்கொள்ளவிருப்பதால் இன்றைய சூழ்நிலையில் புதிய பிரச்சினைகள் இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் இந்திய அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. நோபல் சமாதானப் பரிசை வழங்கும் குழுவினர் நோர்வேயில் உள்ள 65 நாடுகளின் தூதரகங்களுக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், இதுவரையில் 19 நாடுகளே இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளன. சீனா, ரஷ்யா, சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் இந்த அழைப்பை நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. |
12/09/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment