சீனப் பிரதமர் வென் ஜியாபோ இந்தியாவுக்கான விஜயத்தை தொடங்கியுள்ளார். இந்த விஜயத்தில் அவருடன் 400 சீன வர்த்தகப் பிரதிநிதிகளும் வந்துள்ளனர். இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய குழு இந்தியாவுக்கு சென்றதில்லை. இந்தியாவுக்கு மூன்று நாள் விஜயமாக சென்றுள்ள இந்திய பிரதமர் வென் ஜியாபோ, இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல கூட்டாளிகள் என தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகத்தை அதிகரித்து, பதற்றத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சீன பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சீன நிறுவனங்கள் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்ய போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளன. அதே போன்று மேற்கத்திய நாடுகளிடம் இருந்து கடன் வாங்கி வந்த இந்திய நிறுவனங்கள், இனி சீன நிறுவனங்களிடம் இருந்து கடன் உதவிகளை பெறலாம் என்றும் கூறப்படுகிறது. சிக்கலான இந்திய சீன உறவுகள்
இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே உலகின் 40 சதவீத மக்கள் வசிக்கிறார்கள். ஆசியாவின் மூன்று பெரிய பொருளாதாரங்களில் இரண்டு இந்தியாவும் சீனாவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு பெரிய நாடுகளும், சர்வதேச அரங்கில் முன்னணி நாடுகளாக கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் முன்னேறி வருகிற நிலையில், அது உலகளவில் மற்றவர்களுக்கு பெரியளவில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்தச் சூழலில், இந்தியாவும் சீனாவும் இதற்கு எப்படி ஈடு கொடுக்கப் போகின்றன என்று உலமே பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த இரு நாடுகளும் உலக அரங்கில் தங்களைத் தாங்களே எப்படி பார்க்கின்றன என்பதையும், இருவரும் தம்மிடையேயான உறவை எப்படி பார்க்கின்றன என்பதையும் உலக நாடுகள் தீவிரமாக கவனித்து வருகின்றன என்று பிபிசியின் ஒரு செய்தியாளர் கூறுகிறார். அமெரிக்க ஆதிக்கம் காரணமாக உலகம் ஒருமுகமாக துருவப்பப்ட்டுப் போவதை சமன் செய்ய, அதற்கு ஈடுகொடுக்க தங்களுக்கு இடையே கேந்திர ஒத்துழைப்பின் அவசியத்தை இந்தியாவும் சீனாவும் கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்துள்ளன. அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு வளர்ந்து வருவதையும், மற்ற ஆசிய நாடுகளுடன் நேசமான உறவுகளை இந்தியா பேணி வருவதையும் சீனா தெளிவாகவே தெரிந்து வைத்துள்ளது. இது சீனாவின் சொந்த வளர்ச்சிக்கு இந்தியாவின் பதிலாக இருக்கலாம் என்றும் மற்றவர்களால் பார்க்கப்படுகிறது. மேலும் உலக அரங்கில் சீனா தனது ஆளுமையை அதிகரித்து வருவது குறித்து பரந்த்பட்ட அளவில் உள்ள ஒரு கவலையின் வெளிப்பாடாகவும் இந்தியாவின் நிலைப்பாடு பார்க்கப்படுகிறது. |
12/17/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment