கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் அவர்களது நிதி ஒதுக்கீடடின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட மேற்படி பஸ்நிலையம் இன்று முதலமைச்சரினால் உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் எஸ். ஜீவரங்கன்(உருத்ரா) தலைமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் , உள்ளுராட்சி உதவி ஆணையாள் து. சத்தியானந்தி மற்றும் வர்த்தக சங்கப் பிதிநிதிகளும் தனியார் போக்குவரத்து சங்கத்தினர்களும் கலந்து கொண்டார்கள். கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கிடடிpலிருந்து 30 இலட்சம் ரூபாய் இதற்கு செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment