ஐரோப்பாவுக்கு எதிரான ஆபத்துக்களை சமாளிப்பதற்காக ஏவுகணை பாதுகாப்பு திட்டம் ஒன்றை அமெரிக்கா கொண்டுவரவுள்ளது.
இந்த திட்டத்தில் ரஷ்யா சேர்த்துக்கொள்ளப்படாவிட்டால், எங்கள் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று ரஷ்யா மிரட்டியுள்ளது.
ஈரான் நாடு ஐரோப்பாவுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல் நடத்தும் என்று ஐரோப்பிய நாடுகள் அஞ்சுகின்றன. இந்த ஆபத்தை சமாளிப்பதற்காக ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தில் ரஷ்யா இதுவரை சேர்த்துக்கொள் ளப்படவில்லை.
இதனால் இத்தகைய மிரட்டலை ரஷ்யா விடுத்து உள்ளது.
0 commentaires :
Post a Comment