12/20/2010

மட்டக்களப்பில் நிலக்கடலை அமோக விளைச்சல்,சந்தைப்படுத்த முடியாமல் பாதிப்பு

 

goundnut20with20sheelமட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை நிலக்கடலை அமோக விளைச்சலைத்தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய கொக்கொட்டிச்சோலை,வெல்லாவெளி,வவுணதீவு,வாகரை,தொப்பிகலை போன்ற பகுதிகளிலேயே நிலக்கடலை  அதிகமாக செய்கை பண்ணப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
தொப்பிகலை போன்ற நகரப்புறங்களிலிருந்து மிகவும் தூரத்திலுள்ள பகுதிகளில் செய்கை பண்ணப்படும் நிலக்கடலையை சந்தைப்படுத்தமுடியாமல் விவசாயிகள் பெரும் நஸ்டமடைவதாக தெரிவிக்கன்றனர்.
செய்கை பண்ணப்படும் இடங்களில் ஒரு மரைக்கால்(36சுண்டுகள்) 100ரூபாய்க்கே வியாபாரிகள் கொள்வனவு செய்கின்றனர். ஆனால் அவற்றை நகரப்பகுதிகளில் ஓருமரைக்கால் நிலக்கடலையை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்வதை அவதானிக்கமுடிகின்றது.

உற்பத்தி செய்யப்டும் நிலக்கடலையை உரிய விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் ; முன்வரவேண்டுமென விவசாயிகள்; கோரிக்கை விடுக்கின்றனர்

0 commentaires :

Post a Comment