12/13/2010

சுவீடனில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி: இரண்டு பேர் காயம்

Military staffer knew about attacks: report
சுவீடனின் தலைநகர் ஸ்டொக் ஹோமில் கடந்த சனிக்கிழமை இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு பேர் காயமடைந்தனர். பாரிய சேதங்களை ஏற்படுத்தும் நோக்குடன் இந்தக் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதாக அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
பலியானவரின் சடலம் குண்டு வெடித்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. சன நட மாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் இக் குண்டுகள் வெடித்தன. இது பயங்கரவாதத் தாக்குதல் இல்லையென நிராகரிக்க முடியாது எனவும் சுவீடனின் வெளிநாட்டமைச்சர் சொன்னார்.
விசாரணைகள் தொடர்கின்றன. முதலாவது குண்டு மாலை 4. 30 மணியளவில் வெடித்தது. பின்னர் இருநூறு மீற்றருக்கு அப்பால் இரண்டாவது குண்டு வெடித்தது.
காயமடைந்தோர் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட் டனர். இது பயங்கரவாரதத் தாக்குலோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

0 commentaires :

Post a Comment