ஜனாதிபதிக்கு எதிராக ஏதோ வெட்டி கிழித்து விட்டதாக புலம்பெயர் தமிழர்கள் புல்லரித்துக்கிடக்கின்றார்கள். ஆனால் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழ் மக்களுக்கு இதனால் மறுதலையான விளைவுகளே ஏற்பட போகின்றன யுத்த காலங்களில் வீறு கொண்டெழுந்த இன உணர்வுகள்,இன வெறிகள் , போன்றவை கடந்த ஒரு வருடகாலமாக மங்கி வருகின்றன . இலங்கையில் வாழும் மக்கள் இனமத பேதங்களை மறந்து ஒருமித்து வாழ தொடங்கியுள்ளனர் . ஆனால் தமிழர்கள் எனும் பெயரில் கடந்த தினங்களில் லண்டனில் நடத்தப்பட்ட ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தென்னிலங்கை மக்களிடேயே மங்க தொடங்கி இருந்த சிங்கள தேசிய உணர்வுகளை மீண்டும் கிளறி விட்டிருக்கின்றன. இதனால் பாதிக்கப்படபோவது யார் ? இலங்கையில் அனைத்தையும் இழந்து நடை பிணங்களாக வாழும் தமிழ் மக்களின் வாழ்வில் மண் அள்ளிபோடும் வேலையை இனியாவது நிறுத்தி கொள்ள மாட்டர்களா? எம்மீது மீண்டும் இராணுவத்தை ஏவிவிட அரசுக்கு அடி எடுத்து கொடுக்க வேண்டாம் என தயவு செய்து கேட்டு கொள்ளுகின்றோம் .
இலங்கையிலிருந்து சா. ராமநாதன்
0 commentaires :
Post a Comment