பிரிட்டனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவமதிக் கப்பட்டமை உச்ச ஜனநாயக சுதந்திரம், பேச்சுரிமை எனக் கூறிக்கொள்ளும் மேற்குலக நாடுகளின் இரட்டை வேடத்தை அம்பலமாக்கியுள்ளது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஒக்ஸ்போர்ட் யூனியனின் அழைப்பை ஏற்று நாட்டின் தலைவராக சென்ற ஜனாதிபதி தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டார் எனக் கூறி இந்த விவகாரத்திலிருந்து பிரிட்டன் நழுவிவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத் தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் பிரிட்டன் விஜயம் தொடர்பாக செய்தியாளர்கள் இங்கு கேட்ட கேள்விகளுக்கு பதில ளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உச்ச ஜனநாயக சுதந்திரம் உள்ளது எனக்கூறும் பிரிட்டன் உலகிலேயே மிக மோசமான பயங்கரவாத இயக்கம் புலிகள் என்பதை அறிந்தும், அது தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதை அறிந்தும் அதற்கு இடமளித்துள்ளது.
ஜனாதிபதி ஒரு நாட்டின் தலைவராகச் சென்றார். அத்துடன் இலங்கை பொதுநலவாய நாடுகளின் உறுப்புரிமை பெற்ற நாடு. இவ்வாறான ஒரு நாட்டின் தலைவராக, அதுவும் ‘பேச்சு சுதந்திரம் பற்றி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக சென்றார்.
அவரை அழைக்கப்பட்டு பின்னர் அவர் திரும்பி வந்தார். இதனால் எமக்கல்ல, அவர்களுக்கே அவமானம். வீட்டுக்கு ஒருவரை அழைத்துவிட்டு அவர் வரும்போது வீட்டுக்கதவை பூட்டி வீட்டில் யாரும் இல்லை என்று கூறினர். வந்தவருக்கு அவமானமா? அழைத்தவர்க ளுக்கே அவமானம். இதற்கு ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பொறுப்பு கூறவேண்டும்.
உச்ச ஜனநாயக நாடாக இருக்கும் பிரிட்டன் ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கும் இடமளிக்க வேண்டிய நிலையில் உள்ளது தானே? என செய்தியாளர் கேட்டபோது,
அப்படியானால் பிரிட்டன் அல்- கொய்தாவுக்கு அனுமதி வழங்குமா? என கேட்டார்
0 commentaires :
Post a Comment