ஐ. நா. படைகளை வெளியேற உத்தரவு
ஐவரிகோஸ்ட்டில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் குவற்றாவின் வெற்றியை ஐ.நா. அங்கீகரித்தது. இதனால் கோபமுற்ற அந்நாட்டின் ஜனாதிபதி கபகோ அனைத்து ஐ.நா. படைகளையும் வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
ஐவரிகோஸ்ட்டில் அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இருவரும் வெற்றிக்கு உரிமை கோரினர். இதனால் அங்கு பெரும் நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டது. அரசாங்கத்தின் ஒரு பகுதி நிர்வாகத்தை குவற்றா கட்டுப்படுத்த ஊடகம் உட்பட ஏனைய விடயங்களை கபகோ கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தார்.
இவ்விருவரை யும் சமாதானம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதையடுத்து எதிர்க்கட்சி வேட்பாளர் குவற்றாவின் வெற்றியை ஐ.நா. உறுதிசெய்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி கபகோ நாட்டிலுள்ள ஐ.நா. படைகளை வெளியேறும்படி உத்தரவிட்டார்.
0 commentaires :
Post a Comment