12/03/2010

ஏழைகள் வாழ்க்கைச் செலவை சமாளிக்க சீன அரசு உதவி

பீஜிங், சீனாவில் உள்ள ஏழைகள் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக, அவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி அளிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவில் நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி ஏறிவருகிறது. அதைச் சமாளிக்க முடியாமல் அங்குள்ள சாதாரண மக்கள் தடுமாறி வருகின்றனர்.
இதனால், அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை தணிக்கும் வகையில், சீனாவின் மேற்குப் பகுதிகளில் உள்ள வயதானோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு மாதந்தோறும், 20 யுவான் (சீன நாணயம்) வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவின் நாணய மதிப்புக் கணக்குப்படி அமெரிக்க டாலர் மூன்றுக்கு 20 யுவான் சமம். ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 150 ரூபாய் வரை ஒருவருக்கு தரப்படும். இத்திட்டத்தில் முதல் கட்டமாக 46 இலட்சம் பேர் பயனடைகின்றனர்.
இந்தாண்டு நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதில் 15 யுவான், சீன மத்திய நிதியமைச்சகம் தரும். மீதி அந்தந்த மாகாண அரசுகளால் பகிர்ந்துகொள்ளப்படும்.

0 commentaires :

Post a Comment