விக்கிலீக்ஸ் இரகசிய அறிக்கை கள் வெளியானதால் அமெரிக்கா வின் போர் வெறி அம்பலத்துக்கு வந்துள்ளதெனத் தெரிவித்த வெனி சூலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் உடனடியாக ஹிலாரி கிளின்டன் பதவி விலக வேண்டு மெனவும் கேட்டுக் கொண் டார். நேட்டோ படைகளின் போர் தொடர்பான விக்கிலீக்ஸ் அறிக்கைகள் இணையத்தளங்க ளில் வெளியாகி வருவதால் உலகில் பெரும் பதற்றம் எழுந் துள்ளது. இராணுவ, அரசியல் தலைவர்களுக் கெதிரான அச்சுறுத் தல்களும் அதிகரித்துள்ளன.
இந் நிலையில் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பான அனைத்து உயர் மட்டத் தலைவர் களையும் பதவி விலகுமாறு வெனிசூலா ஜனாதிபதி வேண்டு கோள் விடுத்தார். அமெரிக்கா வின் எதிரி நாடுகளில் வெனி சூலாவும் ஒன்று. நீண்ட கால மாக அமெரிக்காவும், வெனி சூலாவும் மோதல் போக்கையே கடைப்பிடிக்கின்றன.
அமெரிக்காவின் போர் இரக சியத் தகவல்கள் வெளியானதால் அமெரிக்கா தர்மசங்கடமான நிலைமையை எதிர்கொண் டுள்ளது. தற் போது அந்நாட்டுத் தலைவர் களை பதவி விலக வேண்டுமென அமெரிக்காவின் எதிரி நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆர் ஜென்டினா ஜனாதிபதி மருத்துவ சிகிச்சை பெற்றுவருவது தொடர் பாக ஆராயும் அமெரிக்கா, ஹிலாரி கிளிண்டனின் மனோ நிலை பற்றி ஆராய ஏனை யோரை அனுமதிக்க வேண்டு மென்றும் ஹுகோசாவெஸ் கேட்டுக் கொண்டார்.
0 commentaires :
Post a Comment