மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் சிறுமி ஒருவரை கர்ப்பிணியாக்கினார் என்ற சந்தேகத்தில் 64வயதுடைய முன்னாள் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தும்பங்கேணி திக்கோடையைச் சேர்ந்த குறித்த சிறுமி செட்டிபாளையத்தில் உள்ள சிறுமியர் இல்லத்தில் இருந்து செட்டிபாளையத்தில் கல்வி கற்று வந்துள்ளார். கடந்த 10ஆம் மாதம் இவர் குழப்படி அதிகம் என்ற காரணத்தினால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் தும்பங்கேணியில் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது இவருடைய வயிறு பெரிதாக இருப்பது கண்டு வைத்தியரிடம் சோதனை நடத்திய போது இவர் கர்ப்பிணி என்பது தெரிய வந்துள்ளது.
அதனைத் தோடர்டந்து சிறுமியிடம் விசாரித்த வேளை குறித்த சிறுமியர் இல்லத்துக்கு அருகில் இருந்த தோட்டத்தில் இருந்துவந்த குறித்த நபர் தன்னுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார
0 commentaires :
Post a Comment