செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா, வருடாந்த பரிசளிப்பு விழா , விவேகம் சஞ்சிகை வெளியீடு என்ற மூன்று நிகழ்வுகளும் ஒன்றாக இணைந்து முப்பெரும் விழாவாக இன்று வித்தியாலயத்தின் அதிபர் வி.குணசீலன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார். மேலும் அதிதிகளாக கிழக்க மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபாசக்கரவர்த்தி, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் எஸ்.யோகராஜா மற்றும் கோட்டக்கல்வி அதிகரிகள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment