ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனால் இலங்கை விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு இலங்கை வருவது நிச்சயமில்லையென ஐ.நா. செயலாளரின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கைக்கு வருவதோ அல்லது இக்குழு நல்லிணக்க ஆணைக்குழுவை எப்பொழுது சந்திக்கும் என்ற விடயமோ இதுவரை நிச்சயமாகவில்லையென ஃபர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித் திருந்தது.
அதேநேரம் இலங்கை விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் காலம் நீடிக்கப்பட்டிருப்பதாகவும் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment