12/24/2010

தென்கொரிய இராணுவம் பெரிய அளவில் போர் ஒத்திகை

தென் கொரியாவுக்கு சொந்தமான தீவான யியோங்பியாங் தீவில் வட கொரியா பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து தென் கொரியா - வட கொரியா இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வட கொரியாவை மிரட்டுவதற்காக தென் கொரியா அந்த தீவில் நேற்று 3வது நாளாக போர் ஒத்திகை நடத்தியது. நேற்று நடந்த ஒத்திகை பெரிய அளவிலானது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஒத்திகையை விட இது மிகப் பெரிய அளவில் நடந்தது.
இந்த ஒத்திகையின் போது பீரங்கிகள், போர் விமானங்கள், அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் பங்குகொண்டனர். 6 கடற்படை கப்பல்களும் இதில் கலந்துகொண்டன.
வட கொரியா மீண்டும் எங்கள் நாட் டின் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று தென் கொரிய இராணுவ தளபதி ஜூ இயூன் சிக் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இதற்கு முன்பு 50 முறை போர் ஒத்திகை நடத்தப் பட்டபோதிலும் இந்த அளவு பெரியதாக இதுவரை நடந்தது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
போர் ஒத்திகைக்கு வட கொரியா எதிர்ப்பு தெரிவித்தது. போர் ஒத்திகை நடத்தினால், முழு அளவிலான போரை தென் கொரியாவுடன் தொடங்குவோம் என்று வட கொரியா எச்சரித்து இருந்தது. ஆனால் மிகப் பெரிய அளவில்போர் ஒத்திகை நடந்தபோது வட கொரியா அமைதி காத்தது.

0 commentaires :

Post a Comment