12/20/2010

சாருமதியும் தோழர்களும்: ஒரு பரந்த ஆய்வின் அவசியமும்

- எஸ்.எம்.எம்.பஷீர்   
“கண்ணகியே தாயே
கற்பின் பேரரசே
தீத்திற‌த்தார் தம்மைத்
தீயீட்டுஅழித்தவளே!
கொங்கை தீயால்
கொடுநகர் எரித்தாய்
மீத‌ முலையொன்று உன்னிடத்தே
மிச்சமிருக்குதம்மா!
அதையும் பிச்செறி இந்த
பினந்தின்னும் நாடெரிய”
     - மறைந்த கவிஞர் வீ .ஆனந்தன் (சம்மாந்துறை)
சாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்- 28.09.1998 ) என்றொரு மானுடன் என்ற லெனின் மதிவானம் எழுதிய நினைவுக் குறிப்பு தேனீயில் அன்மையில் பிரசுரமாகியிருந்தது. சாருமதியுடன் சில நாட்கள் பழக நேரிட்ட போதும் சாருமதியின் இலக்கிய பங்களிப்பு இடதுசாரி  சார்பு அரசியல் நிலைப்பாடு என்பவற்றுக்கப்பால் அவரின் கொள்கைப்பிடிப்பு, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு என்பன பற்றி எனது சிறிய பார்வைப் பதிவு இது.
சாருமதி மட்டுமல்ல அன்று குறிப்பாக எழுபதுகளின் பிறபகுதி தொடங்கி எண்பதுகளின் பிற்பகுதிவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆரோக்கியமான இளைஞர் கூட்டம் ஒன்று இனவாத தமிழ் தேசிய வாத அரசியலுக்கு அப்பால் தீவிர எழுச்சிபெறும் குறுகிய இனவாத அரசியல் ஆபத்துக்களை பற்றிய எதிர்வு கூறல்களுடன் முழு இலங்கையின் உழைக்கும் மக்களின் விடுதலை குறித்து ஆர்வமும் ஈடுபாடும் காட்டிய கால கட்டங்கள் அவை.
தமிழ் தேசிய இனவாத அரசியல் வெறி மாற்று அரசியல் கருத்து தளங்களை ஆக்கிரமித்துக்கொண்டு சென்ற வேளையில் வீரியம் மிக்க இந்த இடது சாரி இளைஞர்கள் சிலர் அவ்வாறான அன்று தோன்றிய தமிழ் அரசியலுக்குள்ளும் ஒத்திசைவான அம்சங்களை கண்டு தங்களை இணைத்துகொண்டதும் அல்லது அடையாளப்படுத்தியதும் ஒரு மெதுவான நிகழ்வாக நடந்தேறியது. ஆனால் சிலர் மிகவும் கொள்கை உறுதி கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள், இன்னும் சிலர் பின்னாளில் தமது அரசியல் சமரசத்திற்காக கழிவிரக்கம் கொண்டு சுய விமர்சனம் கூட செய்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பாக மறைந்த காத்தான்குடி கபூர் ஆசிரியர் , கே. சிவராஜா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சாருமதி பற்றி நானறிந்ததையும் சாருமதி மட்டுமல்ல கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 1970 களில் நன்கு அறியப்பட்ட இடதுசாரி கருத்தியலால் ஈர்க்கப்பட்ட தோழமைக் கூட்டுக்கள் பலமுற்றிருந்த காலகட்டத்தில் த‌மிழ் முஸ்லிம் சமூகத்துள்ளூம் ந‌ல்லுறவு நிலவியதுடன் அக் காலகட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த இலக்கியம் படைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அப்போதுதான் சுபத்திரன் ஆனந்தன் (சம்மாந்துறை)போன்ற கவிஞர்களின் பின்புலத்துடன் தர்மகுலசிங்கம், நேசன் (நிவாஸ்) போன்ற கவிஞர்களும் சமூக அநீதிகளை சாதி ஒடுக்குமுறை அவலங்களை தார்மீக ஆவேசத்துடன் கவிதை மொழியில் எதிர்த்து நின்றனர்.
உழைக்கும் மக்களின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் கருத்துக்களில் மாற்றம் நிகழ்த்தும் செயற்பாடுகளும் அன்றைய சர்வதேச அரசியல் நிகழ்வுகளை அவதானித்து உலகின் ஏகாதிபத்திய எதிப்புவாதமும் முதலாளித்துவ விஸ்தரிப்பு எதிர்ப்பு வாதமும் கொண்ட சூழலில் முன்னெடுக்கப் பட்டன. யாழ்ப்பாண நல்லூரை பிறப்பிடமாக கொண்டு மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்த சாருமதி ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளில் பாலஸ்தீன இயக்கத்தினை அதன் போராட்டத்தினை அன்றைய அரசியல் சம்பவங்களுடன் தங்களை அடிக்கடி முன்னிலைப்படுத்திக் கொண்ட அஹமத் ஆசிரியருடன் தன்னை இணைத்துக்கொண்டு அந்த போராட்ட செயற்பாடுகள் கருத்துரைப்புக்கள் என்பவற்றில் வெளிப்படுத்திக் கொண்டும், ஏனைய அன்றைய சர்வதேச போராட்ட ஆதரவுப் பின்னணிகளில் அவர்கள் யாவரினதும் ஆழுமைகள் அவதானிப்புக்கள் பங்களிப்புக்கள் என்பன இன்று ஆய்வுக்கு நிச்சயமாக உட்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தங்களின் மாணவ காலத்தில் பாலஸ்தீன போராட்டம் பற்றி ஆழமாக தாங்கள் அன்று யாழ்ப்பாணத்தில் அறிந்திருக்கவில்லை என்று "பரபரப்பு" ரிஷி அண்மையில் தனது வானொலி பேட்டியொன்றில் குறிப்பிடும் காலகட்டத்தில்தான் நல்லூரில் கந்தசாமி போன்றோரின் துணையுடன் மக்கள் போராட்டங்களில் முன்னின்ற சாருமதியும் கிழக்குக்கு சென்று வாழத்தொடங்கி அங்கு செயற்பட்ட சர்வதேச மக்கள் விடுதலை போராட்டம் உட்பட அன்று நிலவிய சர்வதேச ஆதிக்க அடக்கு முறைகளுக்காக குரல் கொடுத்த சக்திகளுடன் தன்னை இணைத்துக்கொண்டவர் தான் சாருமதி.
லெனின் மதிவாணன் குறிப்பிட்ட  "சாருமதியை பொறுத்த கனதியான ஆழமான ஆய்வுகள் வெளிவரவேண்டியது அவசியம்" என்ற வேண்டுகோள் சாருமதியோடு சுற்றியிருந்த அந்த நண்பர்கள் குழாத்தின் பலரை பற்றியும் இன்று தோற்றுப் போயிருக்கும் குறுகிய தமிழ் தேசியம் மாற்று  சமூகங்களை விரோதியாக்கிய ஆயுத இனவாத அரசியல் வீழ்ச்சியின் பின்னணியில் அரசியல் தீர்க்க தரிசனத்துடன் கூட்ட்மைத்திருந்த அந்த சமூக முன்னோடிகள் பலரை பற்றியும் ஆழமான ஆய்வுகள் வரவேண்டிய தேவை உண்டு என்பதை அந்த நண்பர் குழாத்தில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் எனது நண்பர் ஒருவரை நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேட்டிருந்தேன்.
 ‌அன்றைய காலகட்டத்தில் இரு (அமெரிக்க , இரஷ்ய )  பிரதான வல்லரசுகளின்  ஆதிக்க போட்டியில் சிக்கி தவித்த சிறிய நாடுகள் இவ்விரு நாடுகளின் அணிக்குள் தம்மை கருத்து ரீதியாக இணைத்துக்கொள்ள , அல்லது இணைக்கப்படாமல் தேசிய சுதந்திர சமூக போராட்டங்களை வென்றெடுக்க  முடியாது பொருளாதார மேம்பாட்டினை அடையமுடியாது என்று சூழல் நிலவிய கால கட்டம் அது. உள் நாடுகளில் காணப்பட்ட இடதுசாரி சக்திகள் தம்மை உலக விடுதலைப போராட்டங்களுடன் அடையாளப்படுத்தும் அந்த கால கட்டங்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும்  அவர்களின் போராட்டத்தையும் ஆராதித்த ஒரு இளைஞர் கூட்டம் கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடியில் நண்பர் வை. அஹமத் ( இப்போது ஒரு பிரபல பாடசாலையின் அதிபராக இருப்பவர்).
அன்றைய காலகட்டத்தில் இரு (அமெரிக்க, இரஷ்ய )  பிரதான வல்லரசுகளின்  ஆதிக்க போட்டியில் சிக்கி தவித்த சிறிய நாடுகள் இவ்விரு நாடுகளின் அணிக்குள் தம்மை கருத்து ரீதியாக இணைத்துக்கொள்ள , அல்லது இணைக்கப்படாமல் தேசிய சுதந்திர சமூக போராட்டங்களை வென்றெடுக்க  முடியாது பொருளாதார மேம்பாட்டினை அடையமுடியாது என்று சூழல் நிலவிய கால கட்டம் அது. உள் நாடுகளில் காணப்பட்ட இடதுசாரி சக்திகள் தம்மை உலக விடுதலைப போராட்டங்களுடன் அடையாளப்படுத்தும் அந்த கால கட்டங்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும்  அவர்களின் போராட்டத்தையும் ஆராதித்த ஒரு இளைஞர் கூட்டம் கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடியில் நண்பர் வை. அஹமத் சாருமதி  கூட்டினால் மிகத் தீவிரமாக செயற்பட்ட காலம் அது.

சாருமதிபோல் சுபத்திரன்போல் நேசன் (நிவாஸ்), தர்மகுலசிங்கம், (இவாகள் இருவரும் தமிழ் ஆயுத வெறியர்களுக்கு பலியானவர்கள்) மக்கள் கவிஞன் வீ . ஆனந்தன் என மக்கள் நலன் சார்ந்த அரசியலும் இலக்கியமும் செய்தவர்கள் கிழக்கின் வரலாற்றுப் பதிவுக்காக ஆய்வு செய்யப்பட வேண்டும் அதற்கான சுழல் இன்று நிலவுகிறது. அதனை இன்றைய கிழக்கிலுள்ள பல்கலைக் கழகங்கள் செய்ய முன்வர வரவேண்டும். முஸ்லிம் தமிழ் ஒற்றுமையை சீர் குழைத்த தமிழ் தேசிய வாத சக்திகளின், இயக்கங்களின் பிற்போக்கு இனவாத அரசியலிலிருந்து மக்களை மீண்டும் கருத்தியல் ரீதியாக சந்திக்க வேண்டிய தேவையும் இன்று உணரப்பட வேண்டும்.

sbazeer@yahoo.co.uk 

0 commentaires :

Post a Comment