12/24/2010

ஈரான் ஜனாதிபதி துருக்கி விஜயம்: ஐ.நாவின் தீர்மானங்கள் குறித்து கவனம்

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் நேற்று துருக்கி பயணமானார். இவருடன் புதிய வெளிநாட்டமைச்சர் அலி அக்பர் சாலியும் சென்றுள்ளார். இவரே ஈரானின் யுரேனியம், அணு என்பவற்றுக்கும் பொறுப்பான விஞ்ஞானி என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குரிய யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜனவரி மாதத்தின் கடைசி பகுதியில் துருக்கியின் தலைநகர் இஸ்தான்புலில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் அஹமெதி நெஜாத் துருக்கி சென்றுள்ளார். அண்மைக்காலமாக ஈரான் துருக்கிக்கிடையி லான உறவுகள் நெருக்கமடைந்து வருகின் றன. இஸ்ரேலுடனான உறவை துருக்கி முற்றாகத் துண்டித்துள்ளது. நிவாரணக்கப்பல் மீது சென்ற வாரம் தாக்கியதால் 09 துருக்கியர்கள் பலியாகினர்.
இதன் பின்னர் இவ்விரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மோசமடைந்தன. துருக்கியுடனான உறவுகள் குறித்து ஈரான் வெளிநாட்டமைச்சர் அலி அக்பர் சாலி தெரிவித்ததாவது, ஈரான் ஒரு மகத்தான நாடு.
ஈரானின் ஆதங்கங்க ளைப் புரிந்து கொள்ளவும் கலாசார உறவுக ளைப் பேணவும் ஈரான் விருப்பமாயுள்ளதெ ன்றார். ஐ.நா. பாதுகாப்புச்சபை ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை கொண்டுவர முயற்சிக்கையில் அதற்கெதிராக துருக்கி வாக்களித்து ஈரானின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய யூனியனில் இணையும் முயற்சியையும் துருக்கி முன்னெடுத்துள்ளது.

0 commentaires :

Post a Comment