தனது கருத்தை வெளிப்படுத்தியமை காரணமாக யாழ். வலிகாமம் கல்விப் பணிப்பாளர் சுட்டுக்கொலை என்ற தலைப்பில் உரிமைகளுக்கான வலைய மைப்பு (னிலீtworking ஜீor ஞிights) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை முற் றிலும் தவறானது என்று அரசாங்க தக வல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாய கம் ஆரியரட்ன அத்துகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கையொ ன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது யாழ்ப் பாணத்தில் உள்ள வலிகாமம் வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் இனந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. எனினும் அந்த அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.
அறிக்கையின்படி பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம், கடந்த 26ஆம் திகதி 2004இல் இடம்பெற்ற சுனாமியை நினைவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்பட வேண்டுமென்று கூறிய சுற்று நிருபத்தை பகிரங்கமாக விமர்சித்தமை காரணமாகவே சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டு விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான எந்தவொரு சுற்றுநிருபமும் எந்தவொரு அரசாங்க அதிகார மையத்தினாலும் விடுக்கப்படவில்லை. எனவே அவ்வாறான சுற்று நிருபத்தை உயிரிழந்தவர் விமர்சித்ததாகக் கூறப்படும் சம்பவம் இடம்பெற்றிருக்க முடியாது.
குறிப்பிட்ட அமைப்பின் அறிக்கையின்படி மேற்படி கொலை சம்பவம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றதாக தமிழ் இணைய தளமொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ள போதும் இவ்வமைப்பு கூறுவது போல் பிறக்குற்றச்சாட்டுகள் இடம்பெற்றில்லை. இதேவேளை சங்கானை முருகமூர்த்தி கோவிலின் பிரதான குருக்கள் நித்தியானந்த சர்மா கடந்த 15ஆம் திகதி கொல்லப்பட்டதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக குறித்த வலையமைப்பு அந்த அறிக்கையில் கூறியுள்ளது. இதுவும் அடிப்படையற்றது. இதனையும் நிராகரிக்க வேண்டியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் கொலை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அதேவேளை சங்கானை முருகமூர்த்தி கோயிலின் பிரதான குருக்க ளின் கொலை தொடர்பாக பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேற்படி இரு கொலை சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகளில் தலையீடு செய்யும் ஒரு முயற்சியாகவே இந்த வலையமைப்பின் அறிக்கை தென்படுகிறது. மேற்படி துர்ப்பாக்கிய சம்பவங்களுக்கு தேவயற்ற அரசியல் சாயம் பூசும் வகையிலும் இதன் மூலம் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும் அந்த முயற்சி அமைகிறது.
மேற்படி அமைப்பின் செயற்பாட்டு குழுவில் ஊடகவியலாளர் உள்ளிட்ட பல இலங்கையர்கள் உள்ளனர்.
இவர்கள் தற்போது சுயமான விருப்பத்தின் பேரில் மேற்கத்திய நாடுகளில் தாய்நாட்டை விட்டு வெளியேறியோர் என்று தம்மை கூறிக் கொண்டு வருபவர்களாவர். இலங்கையின் ஊடக மற்றும் மனித உரிமைக்காக வெளியில் இருந்து செயற்படும் வலையமைப்பு என்று இவர்கள் தம்மைக் குறிப்பிடுகின்றனர். மேற்படி அமைப்பு விடுக்கும் தவறான தகவல் மூலம் இலங்கையில் ஊடக மற்றும் மனித உரிமைகளுக்கான காரணங்களை கொச்சைப்படுத்த முடியாது என்றும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்
0 commentaires :
Post a Comment