உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்திருக்கும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் இரு நாட்டுக்கும் இடையி லான பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான பேச்சுவார்த் தைகளில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்கவிருக்கும் அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு நேரடியாக விஜயம் செய்து மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவைச் சந்திக்கவிருப்பதுடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிசையும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment