12/26/2010

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

யேசு பிரானின் பிறப்புஇ வேதனைகளுடன் பாவச்சுமைகளை சுமந்து கொண்டிருந்த சமூகத்தின் விடிவுக்கு வழிகோலியது. ஓவ்வொரு உயிர்களிடத்தும் அன்பு, பரிவு, கருணை, காரூண்யம் போன்ற தெய்வகுணங்கள் மேலோங்க வேண்டும்இ மன்னிப்பே மகத்தான செயல் என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தம இறை தூதரின் ஆண்மீக சமூக யதார்த்தங்களின் நட்பண்புகள் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டு, தன்னை ஆகுதியாக்கி தனது குருதியினால் மக்களின் பாவங்களை பரிசுத்தமாக்கிய தேவனின் நாளை திடமுடன் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பிறப்பு முதல் வாழ்க்கை வரை ஒவ்வொரு காரியங்களிலும் இரக்க சிந்தை மேலோங்க வேண்டும.; எல்லா மனிதர்களும் எல்லா இடங்களிலும் விட்டுக்கொடுப்புடனுமஇ; பரிவுடனும் உண்மைக்காரியங்களை தொடர்வதுவே இன்றைய தேவையாக உள்ளது. மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் உயரிய பண்பு மிக்கவர்களின்; சமூக விடிவுக்காய்இ சமூக ஒற்றுமைக்காகவும் உற்றுநோக்கிய பார்வை ஒவ்வொருவருவருக்கும் தெளிவு மிக்கதாய் அமைய வேண்டும். தேவனின் பிறப்பினை இறை தூதர்கள் உரைத்த போது எந்த வடிவில்இ எங்கு பிறப்பார்இ எப்படி இருப்பார் என்ற ஏக்க மிளிரலுடன் எதிர்பார்த்த வேளையிலஇ; ஏழ்மையிலும் எழியவராக ;தொழுவத்தில் அவதரித்துஇ மக்களிடையே ஏற்ற இறக்கம் இல்லை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லைஇ சேவை உள்ளம் கொண்ட ஒவ்வொருவரும் எந்நிலையிலும் எந்நேரத்திலும் புனிதர்களாகவே இருப்பர் என்பதனை உணர்த்தும் இத்திருநாளில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களையுமஇ; யுத்த அனர்த்த சுவடுகளுடன் தொலைந்த காலங்களை ஏக்கத்துடன் மீட்க வருவாரா? எமது எதிர்கால வாழ்வு தழைத்தோங்குமா? ஏன்ற எத்தனையோ கேள்விக் கணைகளுடன் நொந்து கொண்டிருந்த கிழக்கு மாகாண மக்களுக்குஇ ஜனநாயக பாதையில் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் மூலம் சேவைகள் வழங்கக்கிடைத்தமையினை பெருமையுடன் நினைவு கூறுவதுடன்இ இல்லாதோர்க்கு அருள்வதே சிறப்பு எனச் ;சொன்ன இயேசு பிரானின் பிறந்த நாளான  இந்நத்தார் பண்டிகையினை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் சகல காரியங்களும் வெற்றியாய் அமைய இறைவவனை பிரார்த்திக்கின்றேன்.
                           சி. சந்திரகாந்தன்.
                           முதலமைச்சர்,
                            கிழக்கு மாகாணம்.

0 commentaires :

Post a Comment