12/14/2010

இந்தியா, ஜேர்மனிடையே அணுசக்தி உடன்படிக்கை


ஜெர்மனியுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி, ஜெர்மனி மற்றும் இந்தியப் பிரதமர்கள் கலந் தாலோசித்தனர்.
“இந்திய- ஜெர்மனி உறவுக்கு தற்போது வானமே எல்லை’ என்று தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், இந்த சந்திப்புக்கு பின் நாடு திரும்பினார். கடந்த 9ம் திகதி, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடந்த 11வது இந்திய- ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார்.
அதில், மும்பைத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர்கள், ஈடுபட்டவர்கள் அனைவரையும் பாகிஸ்தான் விரைவில் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று வற் புறுத்தப்பட்டது. இதையடுத்து, ஜெர்மனியுடன் இருதரப்பு வர்த்த கம், பயங்கரவாதத்தடுப்பு, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மன்மோகன் சிங், ஜெர்மனி தலை நகர் பெர்லினுக்குச் சென்றார்.
அங்கு ஜெர்மனி அதிபர் எஞ்சலா மெர்க்கெல்லுடன் அவர் பேச்சுவார் த்தை நடத்தினார். அதில், இரு தரப்பு சிவில் அணுசக்தி கூட்டுறவுக் கான சாத்தியக் கூறுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. அது சாத்தியமாகும் பட்சத்தில், அமெரி க்கா, பிரான்ஸ் போன்று ஜெர்ம னியும் இந்தியாவுடன் சிவில் அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளும். தற்போது இரு தரப்பு வர்த்தகம் 81 ஆயிரத்து 900 கோடி ரூபாயாக உள்ளது. வரும் 2012க்குள் இதை ஒரு இலட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், “ஜெர்மனியின் ஏற்றுமதி சட்டங்களில் சில விதிகள் தளர்த்தப்பட்டால், அது இரு தரப்பு வர்த்தகத்தையும் அதிகரிக்கும். பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் எவ்வித உறுத்தல் விஷயங்களும் காணப்படவில்லை. தற்போது, இரு தரப்பு கூட்டுறவுக்கும் வானமே எல்லை; ஜெர்மனியுடனான இந்திய உறவு உறுதியாக உள்ளது’ என்று தெரிவித்தார்.
பயங்கரவாதம் குறித்து பேசிய ஜெர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கெல், “அரசியல் பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு பயங்கரவாதம் ஒரு தீர்வாக அமையாது என்பதை வலியுறுத்தினார்.

0 commentaires :

Post a Comment