ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக் கருவான பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்காக பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்க ளை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவினை, வீட்டுப் பொருளாதார அலகுகள் பத்து இலட்சம் நிறுவுவதினூடாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இந்த வேலைத் திட்டத்தை செயற்படுத்தும் விதம் பற்றி ஆராய்வதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில் அதாவுத செனவிரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, பவித்ரா வன்னிஆரச்சி, மஹிந்த யாப்பா அபேவர்தன, சாலிந்த திஸாநாயக்க, ரெஜினோல்ட் குரே, எஸ். எம். சந்திரசேன, ரிஷாட் பதியுத்தீன், முத்து சிவலிங்கம், வீரகுமார திஸாநாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, எச். ஆர். மித்திரபால ஆகிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களும், நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் பீ.
கனேகல, தெங்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட மேலும் உயர் அதிகாரிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இதன் போது கருத்துத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விவசாயம், கமநல சேவைகள், காணி மற்றும் மகாவலி, கால்நடைகள், சிறிய ஏற்றுமதி, சூழலியல், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சுக்களிடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தி இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அந்த அனைத்து அமைச்சுக்களினதும் செயற்றிட்டம் ஒன்றாக இதனைக் கருதுவதாகவும் அவர் கூறினார்.
மஹிந்த சிந்தனையின் பிரகாரம் குடும்பத்தைக் கட்டியெழுப்பி அதனூடாக கிராமத்தைக் கட்டியெழுப்புவ தற்கும், கிராமத்தைக் கட்டியெழுப்பி நாட்டைக் கட்டியெழுப்புவத ற்கும் தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் கூறினார். நாட்டின் முதலீட்டினை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்ற போதிலும், நாட்டின் வீட்டுக் கைத்தொழில் அல்லது சுய தொழிலை பாதிக்கக் கூடிய வகையிலான முதலீடுகளு க்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
0 commentaires :
Post a Comment