
இல12. பிறைன் வீதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றக்கட்டிடம் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் மீள் நிர்மானம் செய்பட்டு வருகின்றது. சுமார் நாற்பது இலட்சம் ரூபாய் நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டு காலங்களாக பயன்படுத்தப்படாது இருந்த மேற்படி கட்டிடமானது முதலமைச்சரது அயராத முயற்சியன் பயனால் தற்போது புத்துயிர் பெற்றிருக்கின்றது. 2011ம் ஆண்டு ஜனவரி 1ந் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சரினால் அக் கட்டிடம் திறந்து வைக்கப்படும்.
தற்போது இந்து மதத்தினை பாதுகாக்க வேண்டும் என பாராளுமன்ற சென்ற மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு இக்கட்டிடத்தினைப் பற்றி தெரிந்திருக்குமோ என்ன?

0 commentaires :
Post a Comment