12/15/2010

ஆயுத களஞ்சியங்கள் கோலோச்சிய முல்லை, கிளிநொச்சியில் இரண்டு ஏக்கரில் நெற்களஞ்சியங்கள்


வன்னியில் புதுப் பொலி வுடனும் சுறுசுறுப்புடனும் வெற்றிநடை போடு கின்றார்கள் மக்கள்.
தம் வழிகாட்டல்களில் மறுபடியும் கால் பதித்து வெற்றியின் பாதையில் செல்கிறார்கள் வன்னி மக்கள்.
முதியவர்கள், பெற்றோர்கள், உழவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மீண்டும் வன்னியைச் செழிப்பாக வைத்திருப்பதற்கு பாடுபடுகின்றார்கள்.
தஞ்சம் புகுந்த மக்களை அரசு கைவிடவில்லை; கைகொடுத்து எழு ப்பியுள்ளது. மக்களுக்கான வீடுகளை தற்காலிக வீட்டுத் திட்டம், நிரந்தர வீட்டுத் திட்டம், பழைய வீடுகளைப் புனரமைத்தல் என்று முதல் கட்ட செயற்திட்டங்களாகச் செய்து வருகின்றது.
இதைவிட மக்களுக்குத் தேவையான விவசாய உபகரணங்கள், வீட்டு உபகரணங்கள் என அனைத்துப் பொருட்களையும் வழங்குகின்றது.
துன்பப்பட்டு வந்த மக்களுக்கு அரசு மட்டுமன்றி, வெளிநாட்டு நிறுவனங்களும் துணை புரிகின்றன.
‘கூதலுடன் குந்தியிருந்த கிழவனும்
கூச்சமிட்டு குதித்து நிற்கின்றான்
வயலில் கலப்பையுடன்’
இவ்வாறு மக்களுக்கு புத்துணர்வு ஊட்டி ஓர் விவசாயிக்கு தேவையான உபகரணங்கள் மானியங்கள் அனைத்தையும் வழங்கி உற்சாகப்படுத்துகிறது அரசு.
வன்னியில் வறண்டு கிடந்த வயல் நிலங்கள் செழிப்பாக காட்சி தருகின்றன. அனைத்து மனிதர்களும் சுறுசுறுப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மழைக்காலத்தில் அதிகாலையில் வயலில் மண்வெட்டியுடன் நிற்கின்றார்கள் வன்னி விவசாயிகள்.
இதை விட வேலை வாய்ப்பு இன்றி வீட்டில் முடங்கியிருந்தவர்கள் இப்போது எந்த தொழிலைச் செய்வதென்றறியாமல் நிற்கின்றார்கள். மேசன், தச்சு வேலைகள், வயல் வேலைகள் கைத்தொழில்கள் என பலதரப்பட்ட தொழில் வாய்ப்புகள் உள்ளன. இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சி நிறுவனங்களான தையல் பயிற்சி, கணனிப் பயிற்சி நிறுவனங்கள், தச்சு, மேசன், பயிற்சி நிறுவனங்கள் போன்றவை தொழிற் பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளன.
பல வகையான பயன்களைப் பெறுவதற்கு இளைஞர்கள் கலந்து பயிற்சி பெறுகின்றார்கள்.
மாணவர்களும் கணனி அறிவைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளார்கள். பாடசாலைகளை மீண்டும் புனரமைப்புச் செய்து தேவையான தளபாடங்கள், கற்றல் உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கான புத்தகங்கள், துவிச்சக்கர வண்டி, புத்தகப்பை, என ஓர் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் புரிந்து வருகின்றன.
இந்த வகையான உதவிகளை மாணவர்கள் பெற்று உற்சாகத்துடனும், போட்டியுடனும் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். பல கலை நிகழ்வுகளில் மாணவர்கள் முன்மாதிரியாக செயற்படுகின்றார்கள். முத்தமிழ் விழா என்னும் நிகழ்வு மிகவும் கோலாகலமாக கிளி/ இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இது பாரம்பாரிய தமிழ் பண்பாட்டு நடைமுறையிலும் தற்காலக் கலை, கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.
வைத்தியசாலைகளில் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் பணியாளர்கள் அதிகளவில் அமர்த்தப்பட்டு மக்கள் சிரமம் இன்றியும் சினம் இன்றியும் நோயினால் வாடி வரும் மக்களை பராமரித்து வருகிறார்கள்.
கைகால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்கள் மற்றும் கைகள் பொருத்தப்படுகின்றன. அங்கவீனர்கள் நன்றாகக் கவனிக்கப்படுகிறார்கள். உளப் பாதிப்புக்குள்ளானோருக்குத் தேவையான உளநல ஆலோசனைகளையும் வழங்கி இவ்வாறு மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
பல இடங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசி வசதிகள் மற்றும் இணைய வசதிகளும் காணப்படுகின்றன. மொத்த விற்பனைக் கடைகள் கூட்டுறவுச் சங்கங்கள், சந்தை மற்றும் வங்கிகள் என அனைத்து அமைப்புக்களும் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கிவிட்டன.
அனைத்து வகையான வங்கிகளும் தமது செயற்பாடுகளை மக்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்குத் தேவையான கடன் வசதிகளான வீட்டுக் கடன், விவசாயக் கடன், மற்றும் பல்கலைக்கழகம் சென்று பயி லும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு வசதிகள் என உதவி புரிந்து வருகின்றன. மற்றும் உழவு இயந்திரங்களை கடன் உதவி மூலம் வழங்குகின்றன.
இதைவிட மக்கள் யுத்தம் நடைபெறுவதற்கு முன் அடகு வைத்த நகைகளை மீண்டும் நகைகளாகவும் இல்லாவிட்டால் நகைக்கான பெறுமதியைப் பணமாகவும் வழங்குகின்றார்கள். இவ்வாறு வன்னியை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் வங்கிகள் செயற்பட்டு வருகின்றன.
எல்லா வகையிலும் உதவிகளை பெற்று வரும் வன்னி மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கவில்லை. மீண்டும் தாம் தமது வளங்களைக் கொண்டு உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்துடன் செயற்பட்டு வருகின்றார்கள்.
பச்சைப் பசேல் என மிளிர்ந்து நிற்கும் நெல் வயல்கள் வைரம் போல் இறுக்கமடைந்திருந்த உடல் நரம்புகளுடன் உழவர்கள் சலசலத் துக்கொண்டிருக்கும் வாய்க்கால்கள் என மிளிர்கிறது வன்னி.
இரண்டு நெற்களஞ்சியங்கள
வடக்கில் பெரும் போக விளைச்சலில் கிடைக்கவிருக்கும் நெல்லை களஞ்சியப்படுத்தும் பொருட்டு இரண்டு நெற்களஞ்சியங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய இரு களஞ்சியசாலைகளை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி பணிப்புரை விடுத்துள்ளார்.
இரு களஞ்சியசாலைகளையும் துரிதமாக அமைக்கவென வட மாகாண சபை, வடக்கின் அவசர மீள் எழுச்சித் திட்டம் என்பவற்றின் ஊடா 80 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கின் அவசர மீள் எழுச்சி திட்டத்தின் ( ‘ரிnஞிலீp’ ) ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய மற்றும் துரித அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யும் விசேட கூட்டம் கொழும்பிலுள்ள ஜனகலா கேந்திரத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.
ரங்கராஜா, வட மாகாண பிரதம செயலாளர் ஏ.சிவகாசுவாமி, வட மாகாண அமைச்சுக்களின் செயலா ளர்கள், வடக்கு அவசர மீள் எழுச்த் திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் எஸ். சிவகுமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் போதே ஆளுநர் மேற்படி பணிப்பை விடுத்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் வாரத்தில் களஞ்சியசாலை அமைப்பதற்கான பணிகள் ஆரம் பிக்கப்பட்டு மார்ச் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
வடக்கில் பல தசாப்தங்களுக்கு பின்னர் இம் முறை ஒரு இலட்சம் ஏக்கர் நிலப்ப ரப்பில் பயிர்ச்செய்கை நடவடிக்கை களை மேற்கொள்ள அரசாங்கம் தீர் மானித்து அதற்கு தேவையான சகல வசதிகளையும் உரமானியங்களை யும் வழங்கி யுள்ளதாக தெரிவித்த அவர், இந்திய அரசினால் கிடைக் கப்பெற்ற நான்கு சக்கர உழவு இய ந்திரங்களும் வட பகுதி விவசாயிகளு க்கு வழங்கப்பட்டுள்ளன என்றார்.

0 commentaires :

Post a Comment