தெற்கு சூடானுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்க உதவப்போவதாக சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பஷிர் தெரிவித்தார். சூடானின் தெற்குப் பிராந்தியத்துக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க ஜனவரி 09 ஆம் திகதி சர்வசன வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ஒமர் அல்பஷிர் தொலைக்காட்சியில் உரையாற்றினார். சூடானின் தென்பகுதியைக் கட்டியெழுப்ப நான் உதவி செய்வேன்.
தென்பகுதி மக்களுக்கு சகோதர நாடொன்றை உருவாக்குவதில் எமக்கு ஆட்சேபனையில்லை. அங்கு பிரச்சினையிருந்தால் எமக்கும் பிரச்சினையே. இதனால் உறுதியான நட்பு நாடொன்றை உருவாக்க வேண்டும்.
இதற்கு மக்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு மக்கள் வாக்களித்தால் சுதந்திரமான தெற்கு சூடானை உருவாக்கியவர் என்ற முதற் பெயருடையவராக நானே இருப்பேன். இப்போது பந்து மக்கள் வசம் உள்ளதென்றார்.
0 commentaires :
Post a Comment